பழநி: பழநி குதிரையாறு அணைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழநி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது குதிரையாறு அணை. இந்த அணைப் பகுதியில் சிறுத்தை நடமாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று பரவியது. அணைப் பகுதி திருப்பூர் மாவட்டம் கொழுமம் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தகவலறிந்து வந்த வனத் துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொது மக்கள் யாரும் தனியாகச் செல்ல வேண்டாம். மேலும், இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், `சிறுத்தை நடமாடுவது போல் பரவிய வீடியோ 4 நாட்களுக்கு முன்பு நடந்தது. தற்போது சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இருப்பினும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளோம்' என்றனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
19 days ago
சுற்றுச்சூழல்
19 days ago