தருமபுரி: தருமபுரியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இணைந்து 25 லட்சம் விதைப் பந்துகளை தயார் செய்து சாதனை படைத்தனர்.
தருமபுரியில் செயல்படும் பச்ச முத்து கல்விக் குழுமம் ஒருங்கிணைப்பில் மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் என 2,500 பேரும், தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் 7,500 பேரும் இணைந்து ஒரே நாளில் 25 லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பச்சமுத்து மகளிர் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரம் நபர்கள் இணைந்து 4 மணி நேரத்தில் 25 லட்சம் விதைப் பந்துகளை தயார் செய்தனர். இந்நிகழ்வு, ‘தொடர்ச்சியாக 4 மணி நேரம் விதைப் பந்துகள் உருவாக்குதலில் அதிக நபர்கள் பங்கு கொள்ளுதல்’ என்ற சாதனை நிகழ்வாக எலைட் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அத்தி, அரசு, ஆல், மூங்கில், புளி, பூவரசு, வில்வம் உள்ளிட்ட ரக மரங்களின் விதைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த விதைப் பந்துகள், வனப்பரப்பை அதிகரிக்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டமான பசுமைத் தமிழகம் திட்டத்துக்கு வழங்கப்பட இருப்பதாக கல்விக் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
» பி.செட்டிஅள்ளி பகுதியில் குட்டியுடன் நடமாடும் சிறுத்தை: வனத்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்
» வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுவன் படுகாயம்: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
18 days ago