ஈரோடு: அறச்சலூர் தலவமலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்காக, 13 இடங்களில் தானியங்கி கேமராவும், 4 இடங்களில் கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது, என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், அறச்சலூர் தலவமலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதற்காக வனத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை, வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு வனச்சரகத்துக்குட்பட்ட அறச்சலூர், வாய்ப்பாடி, காப்புக்கட்டுக் காடு, கொங்கன் பாளையம், அட்டவணை அனுமன் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது, வனத் துறையினர் பொருத்திய தானியங்கி கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையின் மூலம் தனி அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
சிறுத்தையை கண்காணித்து பிடிப்பதற்காக, 13 இடங்களில் தானியங்கி கேமராவும், 4 இடங்களில் கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தையைப் பிடிக்க, கூடுதலான இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, கூடுதலான கூண்டுகள் வைப்பதற்கும் வனத்துறையின் மூலம் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை அலுவலர்கள் மூலம் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
» கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் காரை சேதப்படுத்திய காட்டு யானை
» உதகை ரயில் நிலையப் பகுதியில் மீண்டும் ஈர நிலத்தில் கட்டுமானப் பணி - இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு
வனத் துறையின் நடவடிக்கை களுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். சிறுத்தை தாக்கி உயிரிழந்த ஆடுகளுக்கு ரூ.3,000, கன்றுக் குட்டிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, சிறுத்தையைப் பிடிப்பதற்காக அட்டவணை அனுமன்பள்ளி பகுதியில் வனத்துறையின் மூலம் கூண்டுகள் வைக்கப் பட்டுள்ளதை அமைச்சர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட வன அலுவலர் சுதாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
18 days ago