நாயக்கன்சோலை தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டிருந்த யானைகள் வனத்துக்குள் விரட்டியடிப்பு

By செய்திப்பிரிவு

பந்தலூர்: கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட சேரம்பாடி வனச்சரகம் கோராஞ்சல் பகுதியில் கடந்த 28-ம் தேதி குமார் என்ற மாற்றுத் திறனாளியை காட்டு யானை தாக்கியதில், அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து மாவட்ட வனஅலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து விஜய் மற்றும் வசீம் என்ற இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று நாயக்கன்சோலை பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டிருந்த ஒன்பது யானைகளை, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் பொதுமக்களும், தேயிலை தொழிலாளர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE