ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில், ஆண் யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் வனப்பகுதிகளில் ரோந்து செல்வதன் மூலம் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சத்தியமங்கலம் வனச்சரகத்தில் உள்ள காக்கரை குட்டை பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, ஆண் யானை இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை உதவி மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானையை உடற்கூராய்வு செய்தனர். பின்னர், மற்ற வன உயிரினங்களுக்கு உணவாக யானையின் உடல் வனப்பகுதியிலேயே விடப்பட்டது. யானையின் இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
20 days ago