10 ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டு பறவைகள் வருகை களைகட்டிய ஓசூர் ராமநாயக்கன் ஏரி

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் நகரின் மையப்பகுதியில் 156 ஏக்கர் பரப்பளவில் உள்ள ராமநாயக்கன் ஏரியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் உள்ளூர் பறவைகள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் வந்து செல்லும்.

நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக ஏரி வறண்டு, பறவைகள் வருகை முற்றிலும் குறைந்தது. கடந்தாண்டு இறுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தற்போது ஏரி நிரம்பியது. இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உள்ளூர், வெளிநாட்டுபறவைகள் அதிக அளவில் ஏரியில் முகாமிட்டுள்ளன. இதை உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE