வேதிப்பொருட்கள் மூலம் விநாயகர் சிலைகள் - கண்டுகொள்ளாத மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் @ கிருஷ்ணகிரி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் என்னும் வேதிb பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளால், உள்ளூரில் சிலை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் சிலை தயாரிப்பில் ஈடுபடுவது வழக்கம். பாகுபலி, பஞ்சமுகம், வீர விநாயகர், அவதார விநாயகர், சாந்த முக விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள், ஒரு அடி முதல் 15 அடி வரை தயாரிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், இங்கிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் மூலம் பிஓபி எனப்படும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் என்னும் வேதிப்பொருட்கள் மூலம் சிலைகள் தயாரித்து விற்பனை செய்வதால், உள்ளூர் மண் சிலைகள் தயாரிப்பு வெகுவாக குறைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.

மாசு ஏற்படுத்தாத சிலைகள்: இதுகுறித்து கிருஷ்ணகிரியை சேர்ந்த சிலை தயாரிப்பாளர்கள் சிலர் கூறும்போது, விநாயகர் சதுர்த்திக்கான சிலைகள் ஆர்டர், தற்போது வரை கர்நாடக மாநிலத்தில் இருந்து மட்டுமே வந்துள்ளது. உள்மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் குறைவாக வந்துள்ளது.

நாங்கள் அரை அடி, 1 அடி, 2 அடி, 6 அடி சிலைகள் விற்பனை செய்கிறோம். நாங்கள் காகிதக்கூழ், குச்சிமாவு மற்றும் களிமண்ணால் மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம். இதனை நீர்நிலைகளில் கரைக்கும் போது எவ்வித மாசும் ஏற்படாது. மாறாக உயிரினங்களுக்கு உணவாகிறது.

மண் சிலை விற்பனை பாதிப்பு: மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற வேதிப் பொருட்களால் விநாயகர் சிலைகள் தயாரிக்க அரசு தடைவிதித்துள்ளது. ஆனால், சிலர் தடையைமீறி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் அதிகளவில் சிலைகள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் சிலை தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் இங்கே வந்து தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்கள் மூலம் சிலைகள் தயாரிக்கின்றனர். இதனால் மண்ணால் ஆன சிலைகள் தயாரிப்பு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், தயாரிப்பும் குறைந்து வருகிறது.

நடவடிக்கை இல்லை: இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களிடம் புகாரளித்தாலும் நடவடிக்கை இல்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிலைகள் தடையை மீறி தயாரிக்கப்படுவதால், உள்ளூரில் மண்ணால் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகள் தயாரிப்பதை தடுக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

மேலும்