பனை மரம் விதைகளில் பிள்ளையார் சிலை: சூழலியல் பாதுகாப்புக்கு வழிகாட்டும் மதுரை இளைஞர்! 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சுற்றுச்சூழலை பாதுகாக்க விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்திற்காக பனை மரம் விதைகளில் பிள்ளையார் சிலைகளை தயாரித்து மதுரை இளைஞர் ஒருவர் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்தியா முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா வரும் செப்.18ல் விநாயகர் கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலங்களில் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் விநாயகர் சதூர்த்தி பொதுவெளியில் கொண்டாடப்பட தொடங்கின. அதன்பின் விநாயகர் சதூர்த்தி விழாக்கள் வடமாநிலங்களில் பிரபலமடையவே, தற்போது நாடு முழுவதுமே வீடுகள், தொழில் நிறுவனங்கள், கோவில்களில் மட்டுமில்லாது விநாயகர் சதூர்த்தி விழா பொதுவெளிகளில் கொண்டாடப்படும் விழாவாக மாறியது.

இந்த விழாவுக்காக பொதுவாக சிறிய விநாயகர் சிலைகள் முதல் பல அடி உயரம் 10 அடி உயரம் வரையிலான சிலைகள் வழங்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸ் அனுமதி பெற்று விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாட்டத்தின் இறுதியாக சிலைகள் நீர்நிலைகளை கரைக்கப்படுகின்றன. இந்த சிலைகள் களிமண், ரசாயண மாவுகளை கொண்டு தயாரித்து பொதுமக்களை கவர சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாத வர்ணங்களை பூசி விற்பனை செய்கின்றனர்.

இந்த சிலைகளை நீர்நிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூலும், நீர்நிலைகளையும் மாசு அடைகின்றன. அதனால், தற்போது விநாயகர் சிலைகள் தயாரிப்பு முதல் அதனை நீர்நிலைகளை கரைப்பது வரை பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு விதித்துள்ளனர். அதனால், தற்போது ஒரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு களிமண், காகித கூழ், கிழங்கு மாவு போன்றவற்றை மட்டுமே வைத்து விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். தற்போது விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதனை முன்னிட்டு சிலை தயாரிப்பாளர்கள் இந்து அமைப்பினர், பொதுமக்கள் விரும்பும் வகையில் பல்வேறு வகை சிலைகளை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பனைமரம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாகவும் மதுரையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஜி.அசோக்குமார் என்பவர், பனைவிதையில் விநாயகர் சிலைகளை தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''2018ம் ஆண்டு முதலே பனை மரவிதைகளில் இருந்து பொம்மை தயாரித்து வருகிறேன். ஆரம்பகாலத்தில் இந்த வகை திருஷ்டி தாத்தா பொம்மைகளைதான் கட்டிடங்கள், வீடுகளில் தொடங்கவிட்டனர். காலப்போக்கில் பிளாஸ்டிக் மோகத்தில் இந்த வகை பொம்மைகளை இழந்துவிட்டோம். நம்முடைய பாரம்பரிய பொம்மைகளை மீட்டெடுக்கவே நான், பனை மரவிதை பொம்மைகளை தயாரிக்கும் பயிற்சிகளை சிறுவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறேன். தற்போது விநாயகர் சதூர்த்தி விழாவுக்காக பொதுமக்களை கவருவதற்காக பல வண்ணங்களில் ரசாயனத்தை பயன்படுத்தி விற்பனை செய்கின்றனர்.

இந்த வகை சிலைகள், சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. அதனால், நான் மக்களின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் சிறு முயற்சியாக இந்த ஆண்டு விநாயர் சதூர்த்திக்காக பனைவிதையில் விநாயகர் செய்யும் முயற்சியினை துவங்கியுள்ளேன். இந்த வகை விநாயகர் சிலைகள் இயற்கை உகந்தது. முடிந்தவரை விநாயகர் சதுர்த்திக்குள் இயன்ற பனைவிதை விநாயகர் தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளேன். இந்த பனைவிதை விநாயகரை வணங்கி நீர்நிலைகளில் போடும் போது பனைமரமாக வளர்ந்து வரவும் வாய்ப்பு உள்ளது. பனைமரத்தையும் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் காத்திட ஓர் நல்வாய்ப்பாக அமையும்,'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

47 mins ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

மேலும்