வளமான காடுகளுக்கு யானைகளின் பங்கு மிக முக்கியம் | சர்வதேச யானைகள் தினம் சிறப்பு பகிர்வு

By ஆ.நல்லசிவன்

ஒரு காடு வளமாக இருப்பதற்கு யானைகளின் பங்கு மிக முக்கியம். யானைகள் அழிந்தால் காடுகள் அழியும். காடுகள் அழிந்தால் விலங்குகள், மனிதர்கள் வாழவே முடியாது. உலகம் முழுவதும் குறைந்து வரும் யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யானைகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவும் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கடை பிடிக்கப்படுகிறது.

இந்த நாள் கொண்டாடு வதற்கான நோக்கம், யானையின் குணாதிசயங்கள் குறித்து, சேலத்தை சேர்ந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞர் திவ்யன் சுகு கூறியதாவது: யானை அழகான குணாதிசயம் கொண்டது. அதனை தேவையில்லாமல் தொந்தரவு செய்பவர்களை மட்டுமே தாக்கும். ஒரு எழில்மிகு, வளமான காடுகளை உருவாக்குவதில் யானைகள் பெரிய அளவில் செயலாற்றுகின்றன.

யானைகள் பொதுவாக கூட்டுக் குடும்பமாக வாழக் கூடி யன. ஒரு யானை கூட்டத்தில் பொதுவாக 8 முதல் 15 யானைகள் இருக்கும். அந்த கூட்டத்தை வழி நடத்துவது வயது முதிர்ந்த 40 அல்லது 50 வயதுடைய பெண் யானை ஆகும். மனிதர்களை விட யானைகள் தனது கூட்டத்தை மிக பாதுகாப்பாக கூட்டிச் செல்லும்.

ஒரு குட்டி ஆண் யானை பருவ காலம் வரையே கூட்டத் தில் இருக்கும். அது பருவம் அடைந்த பிறகு, பெண் யானையால் கூட்டத்திலிருந்து வெளியேற் றப்படும். பருவம் அடைந்த ஆண் யானை இணை சேருவதற்காக ஒரு துணையை தேடி சுற்றித் திரியும். அந்த சமயத்தில் அது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும்.

யானைகளின் பிரசவ காலம் 18 மாதத்திலிருந்து 22 மாதங்களாகும். பிரசவத்தின்போது தாய் யானை உயிரிழக்க நேரிட்டால், பிறந்த குட்டியை அந்த கூட்டத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் தனது குட்டியைப் போல பாதுகாக்கும்.

மோப்ப, ஞாபக சக்தி அதிகம்: மற்ற விலங்குகளை விட யானைகளுக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகம். உதாரணமாக, ஒரு மனிதன் அதற்கு அன்பு செலுத்தினாலோ அல்லது துன்பு றுத்தினாலோ அந்த நபரை சுமார் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் கூட அதற்கு ஞாபகம் இருக்கும். யானைகளுக்கு மோப்ப சக்தியும் அதிகம். சுமார் 2 கி.மீ தொலைவு வரை மோப்பம் செய்து வைத்துக் கொள்ளும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE