குன்னூர் அருகே பர்லியாறு பகுதியில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானை

By செய்திப்பிரிவு

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால், இவற்றை உண்பதற்காக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட யானைகள் மலைப் பகுதிக்கு வந்துள்ளன.

கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக சுற்றி வரும் ஒற்றை யானை, இடது பின்னங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, வனப்பகுதியில் உணவு தேடிசெல்ல முடியாததால் ஆற்றோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையைஉணவாக உட்கொண்டு வருகிறது.

நடக்க சிரமப்பட்டு கொண்டிருக்கும் இந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து சிகிச்சை அளிக்க வேண்டுமென, வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திர நாத்திடம் கேட்டபோது, "எங்களது கவனத்துக்கு வரவில்லை. கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE