குன்னூரில் காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டியை தாயிடம் சேர்க்க வனத்துறை முயற்சி

By செய்திப்பிரிவு

குன்னூர்: குன்னூர் மலைப் பாதையில் காட்டு யானை கூட்டத்திலிருந்து தாயை பிரிந்து சாலையில் சுற்றித் திரியும் குட்டியை தாயுடன் சேர்த்து வைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப் பாளையம் மலைப் பாதையில் பலாப் பழ சீசன் தொடங்கியுள்ளதால், அதனை உண்பதற்காக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், ஆங்காங்கே குழுக்களாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், கூட்டத்தில் தாயிடம் இருந்து பிரிந்த குட்டி யானை, கடந்த இரண்டு நாட்களாக சாலையில் சுற்றித் திரிகிறது.

தாயை பிரிந்த இடத்தை தேடி குட்டி யானை நேற்று வந்தது. அப்போது, வனத்துறையினர் தாய் யானை தென்படுகிறதா என உயர்ந்த மரத்தில் ஏறி கண்காணித்தனர். சாலையில் திரிந்த குட்டி யானை வனப்பகுதிக்குள் சென்றது. குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தாயை தேடி குட்டி யானை சாலையில் திரிவது காண்போரை கண் கலங்கச் செய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE