இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் தூய்மை பணி

By செய்திப்பிரிவு

சென்னை: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு, பட்டினப்பாக்கம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 49-வது நிறுவன நாளை முன்னிட்டு, இம்மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தூய்மை நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனை துறை தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எல்பிஜி மண்டல பொதுமேலாளர் பிதாபஸ் சாரங்கி, மனிதவளத் துறை தலைவர் ஆர்.நடராஜன் தலைமையில் ஊழியர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ராமகிருஷ்ணன் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிதாபஸ் சாரங்கி, பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் 227 பேர் பங்கேற்று கடற்கரையை தூய்மைப்படுத்தினர். மேலும், பொதுமக்கள் மத்தியில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE