2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேலூர் மாவட்டத்தின் தலைநகர் தொகுதியாக வேலூர் சட்டப்பேரவை தொகுதி உள்ளது. முதல் இந்திய சுதந்திர போராட்டமாக கருதப்படும் வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற பிரம்மாண்ட வேலூர் கோட்டை, இந்திய அளவில் நூற்றாண்டுகள் புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனை, நூறாண்டுகளை கடந்த வேலூர் மார்க்கெட், முதல் உலகப் போருக்கு வீரர்களை அனுப்பியதன் நினைவாக கட்டப்பட்ட மணிக்கூண்டு, 150 ஆண்டுகள் பழமையான வேலூர் கோட்டை செயின்ட் ஜான்ஸ் தேவாலயம், நூறாண்டுகளை கடந்த வேலூர் ஊரீசு கல்லூரி உள்ளிட்டவை தொகுதியின் அடையாளங்களாக இருக்கிறது.
வேலூர் சட்டப்பேரவை தொகுதியின் பெரும்பான்மையான வாக்காளர்கள் வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் வந்துவிடுகிறார்கள். வேலூர் நகருக்கு கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. சென்னை-பெங்களூரு இடையில் வேகமாக வளர்ந்துவரும் இரண்டாம் கட்ட நகரமாக வேலூர் தொகுதி உள்ளது.
Loading...
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
வேலூர் வட்டம் (பகுதி)
சம்பங்கிநல்லூர், வெங்கடாபுரம், பெருமுகை மற்றும் அலமேலுமங்காபுரம் கிராமங்கள், கொணவட்டம் (சென்சஸ் டவுன்), தொரப்பாடி (பேரூராட்சி), சத்துவாச்சரி (பேரூராட்சி), வேலூர் (நகராட்சி), அல்லாபுரம் (பேரூராட்சி).
தொகுதி மக்களின் கோரிக்கைகள்
வேலூர் மாவட்டத்தின் தலைநகரம் என்பதால் அதிகப்படியான மக்கள் நடமாட்டம் இருக்கும் தொகுதியாக இருக்கிறது. தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சுற்றுச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், வேலூர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட முடியாத நிலையில் சுரங்கப்பாதை திட்டத்தை விரைந்து அனுமதி அளிக்க வேண்டும்.
வேலூரில் இருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி வரை நகர பேருந்து போக்குவரத்தை நீட்டிக்க வேண்டும். சத்துவாச்சாரி, வேலூர் புதிய பேருந்து நிலையம், சேண்பாக்கம், காட்பாடி ரயில் நிலையத்தை இணைக்கும் சர்க்குலர் பேருந்து சேவையை தொடங்க வேண்டும், வேலூர் நகரில் இருந்து பாலாற்றில் கழிவுநீர் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், புதிய பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்ட்டப்பட்ட பள்ளங்களை மூடி சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், வேலூர் கோட்டை அகழியில் படகு போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும், வேலூர் கோட்டை சுற்றுச்சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும், வேலூர் கிருபனந்த வாரியார் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்று தீர்வு காண வேண்டும் உள்ளிட்டவற்றை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
தொகுதி மக்களின் கோரிக்கைகள்
கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் 15 சட்டப்பேரவை தேர்தலை வேலூர் தொகுதி சந்தித்துள்ளது. முதல் தேர்தல் இரட்டை வாக்குரிமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாசிலாமணி, எச்.எம்.ஜெகன்நாதன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
இதுவுரை நடந்து முடிந்துள்ள தேர்தலில் காங்கிரஸ் 5, திமுக 7, அதிமுக 2, தமாகா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர். 1991 முதல் தொடர்ந்து 4 முறை திமுக, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தமாகா சார்பில் போட்டியிட்ட ஞானசேகரன் வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் ஐந்தாவது முறையாக திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஞானசேகரன், அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.எஸ்.விஜய்யிடம் தோல்வி அடைந்தார்.
2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வேலூர் தொகுதியில் 23 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திகேயன் 88,264 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ஹாருன் ரஷீது 62,054 வாக்குகள் பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
பெண்
மூன்றாம் பாலினத்தவர்
26
மொத்த வாக்காளர்கள்
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
ஆருண் ரஷீத்
அதிமுக - மனிதநேய ஜனநாயக கட்சி
2
பி.கார்த்திகேயன்
தி.மு.க
3
ஏ.ஆர்.அப்துர் ரஹ்மான்
விசிக - ம.ந.கூட்டணி)
4
டி.லட்சுமி நாராயணன்
பாமக
5
எஸ்.இளங்கோவன்
பாஜக
6
ஏ.மணிகண்டன்
நாம் தமிழர்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்
ஆண்டு
வெற்றிபெற்றவர்
கட்சி
1952
மாசிலாமணி செட்டி மற்றும் ஜெகன்நாதன்
இந்திய தேசிய காங்கிரஸ்
1957
சாரதி
கட்சி சாராதவர்
1962
ஜீவரத்தினம் முதலியார்
இந்திய தேசிய காங்கிரஸ்
1967
சாரதி
திராவிட முன்னேற்றக் கழகம்
2006 சட்டமன்ற தேர்தல்
43. வேலூர்
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
C. ஞானசேகரன்
ஐ.என்.சி
63957
2
N. சுப்பிரமணி
மதிமுக
42120
3
G.G. ரவி
எஸ்.பி
15710
4
A. ராஜேந்திரன்
தே.மு.தி.க
9549
5
K. கலைசெல்வி
பி.ஜே.பி
2161
6
P.P. ஜெயப்பிரகாஷ்
சுயேச்சை
595
7
J. பாபு
சுயேச்சை
317
8
S. சல்மா
சுயேச்சை
291
9
V. வாசுகி
சுயேச்சை
285
10
B. கார்த்திகேயன்
சுயேச்சை
212
11
E. நிதிவேந்தன்
சுயேச்சை
162
135359
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல்
43. வேலூர்
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
வி. எஸ். விஜய்
அ.தி.மு.க
71522
2
ஞானசேகரன்
காங்கிரஸ்
56346
3
ஹசன் J
சுயேச்சை
5273
4
அரவீந்த் .V
பிஜேபி
4334
5
ஏழுமலை V.S
சுயேச்சை
1333
6
பாபு .J
சுயேச்சை
628
7
சண்முகம் .D
சுயேச்சை
454
8
ஞானசேகர் .P
சுயேச்சை
304
9
நீவேதகுமார் .R
சுயேட்சை
274
10
நீதிவேந்தன் .E
சுயேச்சை
272
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago