2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள விவிஐபி அந்தஸ்து தொகுதியாக காட்பாடி இருந்து வருகிறது. காட்பாடி ரயில் சந்திப்பு நிலையம், விஐடி பல்கலைக் கழகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகம், கிருபானந்த வாரியார் பிறந்த காங்கேயநல்லூரில் அமைந்துள்ள ஞானத்திரு வளாகம் உள்ளிட்டவை தொகுதியின் அடையாளங்கள் ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
காட்பாடி வட்டம் (பகுதி):
தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி, கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்பட்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.
தாராபடவேடு, (பேரூராட்சி), கழிஞ்சூர் (பேரூராட்சி), காட்பாடி (பேரூராட்சி), காங்கேயநல்லூர் (சென்சஸ் டவுன்), காந்திநகர் (காட்பாடி விரிவாக்கம்) (பேரூராட்சி) திருவலம் (பேரூராட்சி) மற்றும் சேனூர் (சென்சஸ் டவுன்),
வேலூர் வட்டம் (பகுதி)
செம்பாக்கம் (பேரூராட்சி)
வாலாஜா வட்டம் (பகுதி)
வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள்.
தொகுதி மக்கள் கோரிக்கைகள்
தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு காட்பாடி தொகுதியின் பெரும்பகுதி பிரிக்கப்பட்டு கே.வி.குப்பம் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறு சீரமைப்புடன் காட்பாடி தொகுதி கடந்த 2011 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. காட்பாடி தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பது விருதம்பட்டில் தொடங்கி கல்புதூர் வரை நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பதுடன் காட்பாடி ரயில் நிலையம் அருகே வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக ஒரு ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அழுத்தமாக கூறுகின்றனர்.
பலமிழந்து காணப்படும் ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும், காட்பாடி பகுதியில் தொடங்கியுள்ள பாதாள சாக்கடை திட்டப் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை துரிதப்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதுடன், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கார்களை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகளால் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வாலாஜாவில் இருந்து எம்பிடி சாலையை விரிவாக்கம் செய்து வாகனத்தை திருப்பி விட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.
வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட காட்பாடி பகுதியில் மோசமான நிலையில் சாலைகளை சீரமைக்க வேண்டும், மூடப்பட்ட தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை (டெல்) மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தாமதம் இல்லாமல் வேலூர்-பிரம்மபுரம் இடையிலான பாலாற்று பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும், பொன்னை தடுப்பணையில் சேதமடைந்துள்ள மதகை சீரமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது.
தேர்தல் வரலாறு
கடந்த 1962-ம் ஆண்டு காட்பாடி தொகுதி ஏற்படுத்தப்பட்டு முதல் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் நாயுடு வெற்றிபெற்றார். இதுவரை 13 சட்டப்பேரவை தேர்தலை சந்தித்துள்ள காட்பாடி தொகுதியில் திமுக 8, அதிமுக 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.
காட்பாடி தொகுதியில் 7 முறை வெற்றியும் இருமுறை தோல்வியும் அடைந்துள்ள திமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன், கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து முறை இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் 10-வது முறையாக அவர் திமுக பொதுச்செயலாளராக காட்பாடியில் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் மொத்தம் 16 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளராக போட்டியிட்ட துரைமுருகன், 90,534 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு 66,588 வாக்குகள் பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
பெண்
மூன்றாம் பாலினத்தவர்
32
மொத்த வாக்காளர்கள்
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
எஸ்.ஆர்.கே.அப்பு
அதிமுக
2
துரைமுருகன்
திமுக
3
டி.வி.சிவானந்தம்
தமாகா
4
என்.டி.சண்முகம்
பாமக
5
கே.எல்.சண்முகம்
சமாஜ்வாதி கட்சி
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )
1962
பி.ராஜகோபால்நாயுடு
காங்கிரஸ்
1967
ஜி.நடராஜன்
திமுக
ஆண்டு
வெற்றிபெற்றவர்
கட்சி
1971
துரைமுருகன்
திமுக
1977
M.A.ஜெயவேலு
அதிமுக
1980
N.A.பூங்காவனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1984
G.ரகுபதி
அதிமுக
1989
துரைமுருகன்
திமுக
1991
K.M.கலைச்செல்வி
அதிமுக
1996
துரைமுருகன்
திமுக
2001
துரைமுருகன்
திமுக
2006
துரைமுருகன்
திமுக
2011
துரைமுருகன்
திமுக
2006 சட்டமன்ற தேர்தல்
40. காட்பாடி
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
துரைமுருகன்
தி.மு.க
86824
2
B. நாராயணன்
அ.தி.மு.க
51677
3
S. ராதாகிருஷ்ணன்
தே.மு.தி.க
8492
4
V.R. சுரேஷ்
பிஜேபி
1543
5
K. ஜெகன்நாதன்
எஸ்.பி.
779
6
V.K.ஸ்டீபன்
சுயேச்சை
550
7
V.முரளி
சுயேச்சை
487
8
M. முத்தையாள்
சுயேச்சை
360
9
A. பேரின்பம்
சுயேச்சை
144
10
P. பாண்டுரங்கன்
சுயேச்சை
96
11
K. பஞ்சவர்ணம்
சுயேச்சை
93
12
K.A. கண்ணன்
சுயேச்சை
85
151130
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்றதேர்தல்
40. காட்பாடி
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
துரைமுருகன்
தி.மு.க
75064
2
அப்பு (எ) ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க
72091
3
வரதராஜன்
பி.ஜே.பி
1539
4
ஸ்ரீராம்
சுயேச்சை
1067
5
ஜெயகொடி
சுயேச்சை
646
6
சாமுவேல் வில்சன்
ஐ.ஜே.கே
519
7
பெல் குமார்
சுயேச்சை
136
8
அஸ்கர் அலி
சுயேச்சை
129
9
பழனி
சுயேச்சை
113
10
அப்பாசாமி
சுயேச்சை
97
11
பஞ்சாசரம்
சுயேச்சை
97
151498
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago