2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த ராஜேந்திர சோழனின் நினைவு கல்லறை அமைந்துள்ளது. செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோயில், மாமண்டூரில் குடைவரை கோயில் போன்றவை பிரசித்தி பெற்றவை. தொழில் வளர்ச்சிக்கு சிப்காட், கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கின்றனர். முதலியார்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களும் உள்ளிட்ட பிற சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
செய்யாறு வட்டம் (பகுதி)
அரியூர், பணமுகை, பிரம்மதேசம், சீவரம், சிறுநாவல்பட்டு, வடஇலுப்பை, செய்யனூர், வெங்கலத்தூர், உமையான்புரம், அரசங்குப்பம், செட்டித்தாங்கல், ஒழுக்கவாக்கம், தாளிக்கல், வெள்ளக்குளம, திருப்பனங்காடு, வெம்பாக்கம், கூத்தனூர், நாட்டேரி, சோணைப்பட்டு, புலிவளம், பூந்தண்டலம், சட்டுவந்தாங்கல், தென்னம்பட்டு, தண்டப்பந்தாங்கல் (ஆர், எப்), அழிவிடைதாங்கி, சேலேரி, திருப்பனமூர், பில்லாந்தாங்கல், நமண்டி, வடமாவந்தல், அப்துல்லாபுரம், சூரங்கனில்முட்டம், பல்லாவரம, கனிக்கிலுப்பை, சேனியநல்லூர், குண்டியாந்தண்டலம, கருட்டல், பூனைத்தாங்கல், மேனல்லூர், கிரிஜாபுரம், கீழ்நாய்க்கன்பாளையம், வடகல்பாக்கம், வாழவந்தல், மாமண்டூர், ஹரிஹரபாக்கம், திருவடிராயபுரம், கீழ்நெல்லி, கரந்தை, சுமங்கலி, ஆலந்தாங்கல், கொடையம்பாக்கம், பெருங்கட்டூர், பெருமாந்தாங்கல், தண்டப்பந்தாங்கல், வடமணப்பாக்கம், மேல்பூதேரி, மோரணம், தளரப்பாடி, புளிந்தை, புள்ளவாக்கம், கம்மந்தாங்கல், பூதேரி, ஆராதிரிவேளுர், அசனம்பேட்டை, தென்கழனி, குன்னத்தூர், காகனம், சித்தாத்தூர், கனகம்பாக்கம், பெரும்புலிமேடு, செல்லப்பெரும்புலிமேடு, அழிஞ்சல்பட்டு, நரசம்ங்கலம், மாத்தூர், சோதியம்பாக்கம், பகவந்தபுரம், எழாக்சேரி, சித்தாலபாக்கம், வயலாத்தூர், அரசாணிப்பாலை, புன்னை, தர்மச்சேரி, பாவூர், உக்கம்பெரும்பாக்கம், மாங்கால், மகாஜனப்பாக்கம், நாவல், கழனிப்பாக்கம், வாழ்குடை.
தொகுதி கோரிக்கைகள்
செய்யாறு அருகே ஜடேரி கிராமத்தில் நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது. அந்த நாமக்கட்டித்தான், நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கட்டி தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட, கடனுதவி வழங்க வேண்டும். திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு வழியாக ஆந்திர மாநிலம் நகரி இடையே ரயில் பாதை அமைக்கும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். செய்யாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி, நகருக்கு ஒதுக்குபுறமான இடத்தை தேர்வு செய்து குப்பை கொட்ட வேண்டும்.
செய்யாறு அருகே உள்ள தூசி கிராமத்தில் இருந்து மாவட்ட தலைநகரான திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்றால் 140 கி.மீ., தூரம் பயணம் செய்ய வேண்டும். அதனால், செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அரசு பொறியியல் மற்றும் மகளிர் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். நெல், கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதனால், தென்தண்டலம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வேண்டும்.
மேலும், எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். செய்யாறில் இருந்து சிப்காட் செல்ல அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். செய்யாறு அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும், போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளதால், மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தேர்தல் வரலாறு
செய்யாறு சட்டபேரவை தொகுதியில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடைபெற்றுள்ள 15 தேர்தலில் திமுக 7 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொது நலக் கட்சி மற்றும் பாமக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2016-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷ்ணு பிரசாத்தை வீழ்த்தி அதிமுகவைச் சேர்ந்த தூசி மோகன் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
பெண்
மூன்றாம் பாலினத்தவர்
1
மொத்த வாக்காளர்கள்
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
கி.மோகன்
அதிமுக
2
எம்.கே.விஷ்ணுபிரசாத்
காங்கிரஸ்
3
ப.சரவணன்
தேமுதிக
4
க.சீனுவாசன்
பாமக
5
ப.பாஸ்கரன்
பாஜக
6
செ.ராஜேஷ்
நாம் தமிழர்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
1951
தர்மலிங்க நாயக்கர்
பொது நல கட்சி
25586
1957
பி. இராமச்சந்தரன்
காங்கிரஸ்
26018
1962
கே. கோவிந்தன்
திமுக
23250
1967
கே. கோவிந்தன்
திமுக
37068
1971
கே. கோவிந்தன்
திமுக
39978
1977
புலவர் கோவிந்தன்
திமுக
33338
1980
பாபு ஜனார்த்தனம்
திமுக
43341
1984
கே. முருகன்
அதிமுக
53945
1989
வி. அன்பழகன்
திமுக
46376
1991
எ. தேவராஜ்
அதிமுக
66061
1996
வி. அன்பழகன்
திமுக
71416
2001
பி. எசு. உலகரசன்
பாமக
62615
2006
எம். கே. விசுனுபிரசாத்
காங்கிரஸ்
60109
2011
முக்கூர் என். சுப்பிரமணியன்
அதிமுக
96180
ஆண்டு
2ம் இடம்பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
1951
பி. இராமச்சந்திரன்
காங்கிரஸ்
19709
1957
வி. தர்மலிங்க நாயகர்
சுயேச்சை
24761
1962
வி. தர்மலிங்க நாயக்கர்
காங்கிரஸ்
22892
1967
கே. எம். கனகன்
காங்கிரஸ்
17395
1971
பெருமாள்சாமி நாயக்கர்
ஸ்தாபன காங்கிரஸ்
31677
1977
கே. சண்முகசுந்தரம்
அதிமுக
21419
1980
கே. எ. விழி வேந்தன்
அதிமுக
35091
1984
பாபு ஜனார்த்தனம்
திமுக
37405
1989
எம். கிருஷ்ணசாமி
காங்கிரஸ்
22993
1991
வி. அன்பழகன்
திமுக
30106
1996
பி. சந்திரன்
அதிமுக
33930
2001
ஆர். கே. பி. இராசராசன்
திமுக
50530
2006
ஆர். பாவை
அதிமுக
55319
2011
எம். கே. விஷ்ணுபிரசாத்
காங்கிரஸ்
70717
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
எம் கே. விஷ்ணுபிரசாத்
காங்கிரஸ்
60109
2
R. பாவை
அ.தி.மு.க
55319
3
D. சுபமங்கலம்
தே.மு.தி.க
13655
4
V. ரவிச்சந்திரன்
சுயேச்சை
2363
5
G. லக்ஷ்மணன்
பி.ஜே.பி
1502
6
வெங்கடேசன்
சுயேச்சை
770
7
T. தமிழினியன்
சுயேச்சை
586
8
N. பார்த்தசாரதி
சுயேச்சை
537
9
M. துரைகண்ணன்
சுயேச்சை
411
10
U. தாஸ்
சுயேச்சை
256
135508
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
N. சுப்பிரமணியன்
அ.தி.மு.க
96180
2
M.K. விஸ்ணுபிரசாத்
காங்கிரஸ்
70717
3
D. விஸ்வநாதன்
சுயேச்சை
3022
4
E. ராஜேந்திரன்
சுயேச்சை
2208
5
D. தமிழரசி
பி.ஜே.பி
2179
6
K.P. இளங்கோவன்
புபா
1759
7
C. பன்னீர்செல்வம்
பி.எஸ்.பி
858
8
A. சிங்காரவேலு
சுயேச்சை
649
9
A. ராஜி
ஐ.ஜே.கே
586
10
E. பொன்முடி
சுயேச்சை
546
11
K. சரவணன்
சுயேட்சை
517
179221
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago