226 - பாளையங்கோட்டை

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ஜெரால்டு அதிமுக
மு.அப்துல்வகாப் திமுக
வி.எம்.எஸ். முகம்மது முபாரக் அமமுக
டி.பிரேம்நாத் மக்கள் நீதி மய்யம்
க.பாத்திமா நாம் தமிழர் கட்சி

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று பெயர் பெற்ற பாளையங்கோட்டை தொகுதியில் திருநெல்வேலி தாலுகாவின் ஒரு பகுதியும், திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 5 முதல் 39 வது வார்டுகளும் இடம் பெற்றுள்ளன.

பாளையங்கோட்டையில் அரசு மருத்துவகல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, அரசு சித்த மருத்துவ கல்லூரி, நூற்றாண்டு பழமையான கலை அறிவியல் கல்லூரிகள், நூற்றுக்கணக்கான பள்ளிகள் இங்கிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சரக டிஐஜி அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்அலுவலகம், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் என்று பல்வேறு முக்கிய அரசுத்துறை அலுவலகங்களும் இத்தொகுதிக்குள் இருக்கின்றன. அண்ணா விளையாட்டரங்கம், திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம், வ.உ.சி. மைதானம் என்று இத்தொகுதியை அடையாளப்படுத்தும் அம்சங்கள் ஏராளம் உள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 5 முதல் 39 வரை.

இத்தொகுதிக்கு உள்பட்ட மேலப்பாளையம் பகுதியில் 95 சதவிகிதத்துக்கு மேல் முஸ்லிம்களே வசிக்கிறார்கள். இது போல் பாளையங்கோட்டை நகர்ப்புற பகுதியில் பெருமளவுக்கு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். மேலப்பாளையம் பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களும் உள்ளனர். இத்தொகுதியில் ஆசிரியர்கள், பணிகளுக்கு செல்வோர் என்று நடுத்தரவர்க்கத்தினர் அதிமுள்ளனர்.

தொகுதியின் பிரச்சினைகள்

முக்கிய போக்குவரத்து பகுதியான குலவணிகர்புரம் ரயில்வேகேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. நகர்ப்புறபகுதிகளில் பெருகிவரும் ஆக்கிரமிப்புகளால் மழைகாலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர்புகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தினம் தினம் அவதியுறுகிறார்கள். வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் வண்டி வண்டியாக பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. அரசு சித்த மருத்துவ கல்லூரியும் மருத்துவமனையும் பாழடைந்து கொண்டிருக்கிறது. இங்கு உரிய ஆராய்ச்சி பிரிவுகளை தொடங்கவும், விசாலாமான இடத்தில் இக்கல்லூரியை செயல்பட வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

1967 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னர் இது பாளையங்கோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது. 1977 முதல் 2011 வரை இத்தொகுதியில் நடைபெற்ற 9 சட்டப்பேரவை தேர்தல்களில் 6 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. கடந்த 2006, 2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக உறுப்பினர் டி.பி.எம். மைதீன்கான் வெற்றி பெற்றிருந்தார்.

கடந்த 2016 தேர்தலில் திமுகவைச் சேர்ந்த டி.பி.எம். மைதீன்கான் 67,463 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவருக்கு அடுத்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.கே.ஏ. ஹைதர் அலி 51,591 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பெற்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,24,695

பெண்

1,28,617

மூன்றாம் பாலினத்தவர்

22

மொத்த வாக்காளர்கள்

2,53,334

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

டி. பி. எம். மொகைதீன் கான்

திமுக

2006

டி. பி. எம். மொகைதீன் கான்

திமுக

57.16

2001

டி. பி. எம். மொகைதீன் கான்

திமுக

53.13

1996

முகமது கோதர் மைதீன்

(முஸ்லீம் லீக்-திமுகவின் சின்னத்தில்)

62.98

1991

P.தர்மலிங்கம்

அதிமுக

46.11

1989

S.குருநாதன்

திமுக

34.41

1984

V.S.T.ஷம்சுல் ஆலம்

(முஸ்லீம் லீக்-திமுகவின் சின்னத்தில்)

51.92

1980

V.கருப்பசாமி பாண்டியன்

அதிமுக

57.96

1977

நாஞ்சில்.K.மனோகரன்

அதிமுக

44.1

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

T.P.M. மொய்தீன் கான்

தி.மு.க

85114

2

K.M. நிஜாமுதின்

அ.தி.மு.க

43815

3

K.A.K.K. கலீல் ரகுமான்

தே.மு.தி.க

6342

4

V. முருகன்

எ.ஐ.எப்.பி

5399

5

பேச்சிமுத்து

பாஜக

2839

6

M. எட்வார்டு ராஜ்

பி.எஸ்.பி

2354

7

K. சுபாஷ் சுந்தர்

சுயேச்சை

843

8

K. ஜெபாகுமார்

சுயேச்சை

579

9

P. நரேஷ் அம்பேத்கர்

சுயேச்சை

398

10

D. வேத மாணிக்கம்

சுயேச்சை

364

11

H. நாமசிவாயா சங்கர்

சுயேச்சை

191

12

I. வர்கீஸ் அமுல்ராஜ்

சுயேச்சை

171

13

E. சுடலை மணி

ஆர்.எல்.டி

142

14

A. கண்ணன்

சுயேச்சை

128

15

P. தங்கவேல்

சுயேச்சை

119

16

P. கோமதி நாயகம்

சுயேச்சை

102

148900

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

T.P.M. மொய்தீன் கான்

தி.மு.க

58049

2

V. பழனி

சி.பி.எம்

57444

3

K.S. சாகுல்ஹமீது

சுயேச்சை

7032

4

S. கார்த்திக்நாராயணன்

பி.ஜே.பி

6939

5

A. ஹைதர் அலி

சுயேச்சை

2624

6

S. வேலாயுதம்

சுயேச்சை

1000

7

P. ஸ்டீபன்

பி.எஸ்.பி

983

8

மொகமத்பசுலால்இலக்கி

சுயேச்சை

525

9

A. ஷேக் ஹயாத்

சுயேச்சை

423

10

K. பாலமுருகன்

சுயேச்சை

363

11

S. கஜேந்திரராஜ்

சுயேச்சை

195

12

S. அப்துல்காதர்

சுயேச்சை

193

135770

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE