2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழில் வளம் மிக்க தொகுதியாக வாணியம்பாடி திகழ்கிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியான வாணியம்பாடியில் இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டணி வைத்த கட்சிகளே அதிக முறை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 2 முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் 2 முறையும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 4 முறையும், இந்திய தேசிய லீக் 2 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 3 முறையும், சுயேட்சை ஒரு முறை வென்றுள்ளது.
தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாவும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது தவிர தென்னை, நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட விவசாய தொழில்களும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாய் பின்னுதல், பீடி சுற்றுதல், லுங்கி நெய்தல், கட்டிடத்தொழில், கால்நடை வளர்ப்பு போன்ற தொழிலாளர்களும் அதிகம் பேர் வசிக்கின்றனர். மேலும், தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில் நுட்பக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் இத்தொகுதியில் உள்ளன.
தொகுதி கோரிக்கைகள்
கடந்த தேர்தல்களில் வாணியம்பாடி தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு சில கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக அரசு கல்லூரி வாணியம்பாடியில் அமைக்க வேண்டும், வாணியம்பாடி நகர் பகுதியில் அரசுப்பள்ளி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட நெக்னா மலைப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றே கூறலாம்.
குறிப்பாக வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைக்கழிவுகளும், இறைச்சிக்கழிவுகளும் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் நகராட்சியை தூய்மையுடன் பராமரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. அதேபோல, பல லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது.
பல்வேறு கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டாலும் மாவட்ட தொழில் மையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு சார்பில் தோல் தொழில் பயிற்சி மையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை கொண்டு வந்தது தொகுதி மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
2016 தேர்தல்
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் நிலோபர்கபீல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் தையத்பாரூக், தாமக சார்பில் ஞானசேகரன், பாமக சார்பில் கிருபாகரன், பாஜக சார்பில் வெங்கடேசன் போட்டியிட்டனர். இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட நிலோபர்கபீல் வெற்றிப்பெற்று தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
பெண்
மூன்றாம் பாலினத்தவர்
37
மொத்த வாக்காளர்கள்
2020 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
கே.நீலோபர் கபீல்
அதிமுக
2
சையத் பாரூக்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
3
சி.ஞானசேகரன்
தமாகா
4
இரா.கிருபாகரன்
பாமக
5
ஜி.வெங்கசேடன்
பாஜக
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
வாணியம்பாடி வட்டம் (பகுதி)
தும்பேரி, நெக்னாமலை, ஆலங்காயம் (ஆர்.எப்), நிம்மியம்பட்டு, வெள்ளகுடை, கொத்தகொட்டை, வளையாம்பட்டு, வாணியம்பாடி, சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், சீமுகம்பட்டு, அலசந்தாபுரம், வெங்கடராஜசமுத்திரம், நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், கொள்ளப்பள்ளி, குருவானிகுண்டா, ராமநாயக்கன்பேட்டை, வடக்குப்பட்டு, கனகப்பட்டு, தேவஸ்தானம், அம்பலூர், கோவிந்தபுரம், ஆம்பூர்பேட்டை, வள்ளிப்பட்டு, தெக்குப்பட்டு, மல்லான்குப்பம், மல்லகுண்டா, ரெட்டியூர், நரசிங்கபுரம், மரிமாணிகுப்பம், நாச்சியார்குப்பம், பூங்குளம், நாய்க்கனூர், சத்திரம்,காவலூர், பீமகுளம்,மிட்டூர், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, பெருமாபட்டு மற்றும் குரிசிலாபட்டு கிராமங்கள்.
உதயேந்திரம் (பேரூராட்சி), ஜாபராபாத் (சென்சஸ் டவுன்), வாணியம்பாடி (நகராட்சி) மற்றும் வார்ப்புரு:ஆலங்காயம் (பேரூராட்சி). வேலூரின் முக்கிய சுற்றுலா தலமான காவலூர் இப்பகுதியில் அமைந்துள்ளது.
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்
ஆண்டு
வெற்றிபெற்றவர்
கட்சி
1952
A. K.ஹனுமந்தராயகவுண்டர்
சுயேச்சை
1957
A. A. ரசீது
காங்கிரஸ்
1962
M. P. வடிவேல்
திமுக
1967
ராஜமன்னார்
காங்கிரஸ்
1971
அப்துல் லத்தீப்
இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்
1977
அப்துல் லத்தீப்
இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்
1980
N.குலசேகரபாண்டியன்
அதிமுக
1984
H. அப்துல் மஜீது
இந்திய தேசிய காங்கிரஸ்
1989
P. அப்துல் சமது
இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் லத்தீப் அணி
1991
E. சம்பத்
இந்திய தேசிய காங்கிரஸ்
1996
அப்துல் லத்தீப்
இந்திய தேசிய லீக்
2001
அப்துல் லத்தீப்
இந்திய தேசிய லீக்
2006
H. அப்துல்பாசித்
இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்
2006 சட்டமன்ற தேர்தல்
47. வாணியம்பாடி
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
H. அப்துல் பாசித்
தி.மு.க
69837
2
K. முகமத் அலி
அ.தி.மு.க
45653
3
K. அன்வர்- உல்-ஹக்
தே.மு.தி.க
9937
4
N. ராதாகிருஷ்ணன்
சுயேச்சை
2218
5
K. ஆனந்தன்
பி.ஜே.பி
1821
6
G.S. ஜெய்சங்கர்
எ.பி.எச்.எம்
770
7
P. ராஜேந்திரன்
பி.எஸ்.பி
535
8
M. நாகப்பன்
சுயேச்சை
376
9
சையத் மரூஃப் அகமத்
சுயேச்சை
213
131360
2011 சட்டமன்ற தேர்தல்
47. வாணியம்பாடி
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான் வாக்குகள்
1
கோவி. சம்பத்குமார்
அ.தி.மு.க
80563
2
அப்துல் பாசித்
தி.மு.க
62338
3
முகமத் இலியாஸ்
சுயேச்சை
2548
4
வசீர் அகமத் .J
பிஎஸ்பி
1149
5
அப்துல் வாகீத் .P
சுயேச்சை
807
147405
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago