221 - கடையநல்லூர்

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி கிருஷ்ணமுரளி அதிமுக கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) திமுக அய்யாதுரை பாண்டியன் அமமுக அம்பிகாதேவி மக்கள் நீதி மய்யம் மா.முத்துலெட்சுமி நாம் தமிழர் கட்சி

செங்கோட்டை தாலுகா, தென்காசி தாலுகாவின் ஒரு பகுதி, 11 ஊராட்சிகள், கடையநல்லூர் நகராட்சி, சாம்பவர் வடகரை, ஆய்குடி பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது கடையநல்லூர் தொகுதி.

கடையநல்லூர் தொகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் பெருமளவில் உள்ளனர். மலையோர பகுதி விவசாய நிலங்கள் செழிப்பாக உள்ளன. விவசாயிகளை அதிகம் உள்ளடக்கியது இத்தொகுதி.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

செங்கோட்டை தாலுகா

தென்காசி தாலுகா (பகுதி)

பூலாங்குடியிருப்பு, சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி புடு, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேழகியான், கிளாங்கோடு, நயினாரகரம், இடைக்கால், காசிதர்மம், மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள்,

கடையநல்லூர் (நகராட்சி),செங்கோட்டை (நகராட்சி), புதூர்(செ) பேரூராட்சி, சாம்பவர் வடகரை (பேரூராட்சி) மற்றும் ஆயிக்குடி (பேரூராட்சி).

தொகுதியின் பிரச்சினைகள்

வடகரை, செங்கோட்டை பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள் புகுந்து சேதம் விளைவிக்கும் பிரச்சினை நீண்டகாலமாக உள்ளது.

வனத்துறையின் மின்வேலி அமைக்கும் திட்டம்சரிவர செயல்படுத்தப்படவில்லை. வன விலங்குளால் பயிர்கள் சேதமடைவதைத் தடுக்கவும், பயிர்ச் சேதத்துக்கு இழப்பூடு வழங்கவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

குண்டாறு அணையில் சேறு நிரம்பி காணப்படுவதால் போதிய நீரை தேக்க முடியவில்லை. இந்த அணையை தூர்வார வேண்டும். அதன் அருகில் உள்ள பூங்காவை சீரமைத்து, சுற்றுலாத் தலமாக்க வேண்டும். அடவிநயினார் அணை, கருப்பாநதி அணை ஆகியவற்றையும் தூர்வாரி, அவற்றின் அருகில் பூங்கா அமைக்க வேண்டும். கடையநல்லூரில் கழிவுநீர் பிரச்சினையால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டுக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு காண வேண்டும்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கேரளாவில் இருந்து கொண்டு வந்து சாலையோரங்களில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மின்னணு சாதன கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க புளியரையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தேர்தல் வரலாறு

1967 முதல் 2016 வரை நடைபெற்ற 12 சட்டப் பேரவை தேர்தல்களில் இத்தொகுதியில் அதிமுக 5 முறை, திமுக 3 முறை, காங்கிரஸ் ஒரு முறையும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 முறையும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2006-ல் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் வெற்றி பெற்றிருந்தார். 2011-ல் அதிமுக வேட்பாளர் பி.செந்தூர்பாண்டின் வெற்றி பெற்றிருந்தார். 2016-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் வெற்றி பெற்றார்.

கடந்த 2016 தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சேர்ந்த முகம்மது அபூபக்கர் 70,763 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுகவின் சேக் தாவுத் 69, 569 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,32,345

பெண்

1,32,126

மூன்றாம் பாலினத்தவர்

5

மொத்த வாக்காளர்கள்

2,64,476

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

பூ. செந்தூர் பாண்டியன்

அதிமுக

2006

S.பீட்டர் அல்போன்ஸ்

இ.தே.கா

44.58

2001

M.சுப்பைய்யா பாண்டியன்

அதிமுக

45.57

1996

K.நைனா முகமது

திமுக

46.58

1991

S.நாகூர்மீரான்

அதிமுக

56.59

1989

சம்சுதீன் (எ) கதிரவன்

திமுக

36.71

1984

T.பெருமாள்

அதிமுக

53.44

1980

A.சாகுல் அமீது

சுயேச்சை

50.71

1977

M.M.A.ரசாக்

அதிமுக

38.78

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S. பீட்டர் அல்போன்ஸ்

காங்கிரஸ்

53700

2

H. கமாலுதீன்

அ.தி.மு.க

49386

3

M. அறுமுகசாமி

பி.எஸ்.பி

6760

4

V.S. திருப்பதி

சுயேச்சை

3229

5

M. சண்முகவேல்

பாஜக

3203

6

ராஜ் (எ) சண்முகராஜ்

எஸ்.பி

1372

7

மக்தூம்

சுயேச்சை

1196

8

P.S. பாண்டியன்

சுயேச்சை

1110

9

V. செந்தில் ராஜ்

சுயேச்சை

490

120446

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. செந்துர் பாண்டியன்

அ.தி.மு.க

80794

2

S. பீட்டர் அல்போன்ஸ்

காங்கிரஸ்

64708

3

S. முகமது முபாரக்

எஸ்.டி.பி.ஐ

6649

4

R. பாண்டி துரை

பாஜக

3233

5

S.S. ஜாஹிர் ஹுசைன்

சுயேச்சை

1753

6

M. ராமையா

பி.எஸ்.பி

1177

7

K. முகமது ஜாபர்

சுயேச்சை

929

8

P. ராமநாதன்

சுயேச்சை

471

9

T. மாரிமுத்து

சுயேச்சை

417

10

M. பாலசுப்பிரமணியன்

சுயேச்சை

385

11

A. சங்கர்

சுயேச்சை

345

12

A. கணேசன்

சுயேச்சை

324

13

P.V. அழகையா

சுயேச்சை

323

14

P. மாஹாராஜா பாண்டியன்

சுயேச்சை

263

15

A. அயூப் கான்

சுயேச்சை

207

16

G. சுதாகர்

சுயேச்சை

177

162155

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்