2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று கும்பகோணம். கோயில்களின் நகரமாக அழைக்கப்படும் இந்த தொகுதி 1957 ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த தொகுதியில் ஒரு நகராட்சி, தாராசுரம், சோழபுரம், திருநாகேஸ்வரம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளது.
இந்த தொகுதியில் செளராஷ்டிரா சமூகத்தினர், பிராமணர்கள், வன்னியர்கள், முக்குலத்தோர், தலித்துகள், இஸ்லாமியர்கள் ஆகியோர் அதிகம் நிறைந்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தின் தலைமையிடம், காவிரி நதிப்படுகையின் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் தலைமையிடம் ஆகியவை வணிகவரித்துறை, வருமான வரித்துறை அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை, ஐந்து மாவட்டங்களுக்கு கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகம் என பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கும்பகோணம் வட்டம் (பகுதி)
அத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்தநல்லூர், கொத்தங்குடி, கொத்தங்குடி தட்டிமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப்புலியூர், கொரநாட்டுகருப்பூர்-மி, அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், கொரநாட்டுகருப்பூர் 2. அம்மாசத்திரம், முப்பக்கோவில், மேலக்காவிரி, பாபுராசபுரம், பழவதான்கட்டளை, மிருத்தியஞ்சப்படைவீடு, அம்மாத்தோட்டம், சீனிவாசநல்லூர், அன்னலக்ரகாரம், சோழநாளிகை, ஆரியபடைவீடு, மேலகொற்கை, கீழகொற்கை, பாலையநல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதாநல்லூர், சேசம்பாடி, தேனாம்படுகை, உடையாளூர்பெரும, தில்லையாம்பூர், திப்பிராஜபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டுமால், சாரங்கபாணிபேட்டை, தாராசுரம் மற்றும் மருதடி கிராமங்கள்.
கும்பகோணம், சோழபுரம், உள்ளூர், பெருமாண்டி, தாராசுரம்மற்றும் திருநாகேஸ்வரம்.
உலக பிரசித்தி பெற்ற தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் உள்பட பல ஆன்மீக தலங்களை கொண்டுள்ளது.
தொகுதி பிரச்சினைகள்
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதியவருவாய் மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்த தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் தலா ஆறு முறையும், அதிமுக இரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெற்ற கோ.சி.மணி இரு முறை அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த இரண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சாக்கோட்டை க.அன்பழகன் வெற்றி பெற்று எம்எல்ஏவாகியுள்ளனர்.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
ரத்னா சேகர்
அதிமுக
2
சாக்கோட்டை க. அன்பழகன்
திமுக
3
த. பரமசிவம்
தேமுதிக
4
கி. வெங்கட்ராமன்
பாமக
5
பழ. அண்ணாமலை
பாஜக
6
மா. மணிசெந்தில்
நாம் தமிழர்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,21,805
பெண்
1,24,460
மூன்றாம் பாலினத்தவர்
-
மொத்த வாக்காளர்கள்
2,46,265
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு
2011
க.அன்பழகன்
தி.மு.க
2006
கோ.சி.மணி
தி.மு.க
55.04
2001
கோ.சி.மணி
திமுக
53.78
1996
கோ.சி.மணி
திமுக
44.9
1991
இராம.இராமநாதன்
அதிமுக
64.25
1989
கோ.சி.மணி
திமுக
29.5
1984
K.கிருஷ்ணமூர்த்தி
காங்கிரஸ்
67.4
1980
E.S.M. பக்கீர்முஹம்மது
காங்கிரஸ்
59.79
1977
S.R.இராதா
அதிமுக
34.41
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
கோசி. மணி
தி.மு.க
63305
2
E. ராமநாதன்
அ.தி.மு.க
51164
3
G. தேவதாஸ்
தே.மு.தி.க
5195
4
R. கோதண்டராமன்
பி.ஜே.பி
1629
5
R. வெங்கட்ரமனி
சுயேச்சை
824
6
T. ராமகிருஷ்ணன்
பி.எஸ்.பி
530
7
A. சங்கரநாராயணன்
எஸ் பி
391
125038
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
G. அன்பழகன்
தி.மு.க
78642
2
E. ராமநாதன்
அ.தி.மு.க
77370
3
P.L. அண்ணாமலை
பி.ஜே.பி
1606
4
M.B.S. தட்சணாமூர்த்தி
ஐ.ஜே.கே
1087
5
G. ராஜ்குமார்
பி.எஸ்.பி
727
6
S. விஜயாலக்ஷ்மி
சுயேச்சை
649
7
M. பனிமய மேரி ராஜ்
சுயேச்சை
555
8
R. மோகன்
சுயேச்சை
478
9
P. சுப்பிரமணியன்
சுயேச்சை
294
123180
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago