2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
மாவட்டத் தலைநகரில் சிவகங்கை தொகுதி உள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் அரண்மனை அடையாளச் சின்னமாக உள்ளது. தற்போது அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. பெரிய மருதுபாண்டியர்கள் கட்டிய சொர்ண காளீஸ்வரர் கோயில் காளையார்கோவிலில் உள்ளது.
1985-ல் பழைய ராமநாதபுரத்திலிருந்து சிவகங்கையை தனி மாவட்டமாக பிரித்து எம்ஜிஆர் உத்தரவிட்டார். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லுவரி, தலைமை தபால் அலுவலகம் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன.
வானம் பார்த்த பூமியாக உள்ளதால் விவசாயமானது கண்மாய் மற்றும் கிணற்றுப்பாசனத்தை நம்பியே உள்ளன. விவசாயத்திற்கு உத்திரவாதம் இல்லாததால், கூலித் தொழிலாளர்களாக வெளியூர், வெளிநாடு வேலைக்கு செல்கின்றனர். இங்கு கிராபைட் கனிமவளம் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு கனிம வளத்துறை சார்பில் கிராபைட் ஆலை உள்ளது. இதனை கிராபைட் சார்ந்த தொழிற்சாலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நீடிக்கிறது. இத்தொழிற்சாலை உருவானால் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டாததால் போதிய தொழில் வளர்ச்சி இல்லை.
சிவகங்கை நகராட்சி, சிவகங்கை, காளையார்கோவில் (தாலுகாக்கள்), கல்லல் (காரைக்குடி தாலுகா) ஆகிய மூன்று ஒன்றியங்கள் உள்ளன. கல்லல் ஒன்றியத்தில்அரண்மனை சிறுவயல், கீரணிபட்டி, அரண்மனை கூத்தலுவர், வெற்றியூர், மாலைகண்டான் உள்பட 14 ஊராட்சிகள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இங்கு முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், உடையார்- கிறிஸ்தவர், யாதவர் கணிசமாக உள்ளனர்.
அரசு கலைக்கல்லுவரிகள், தனியார் பொறியியல் கல்லுவரிகள், காளையார்கோவில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளன.
1952-ல் 14 தேர்தல்களை சந்தித்த இத்தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், சுதந்திரா கட்சி ஒருமுறையும், திமுக நான்கு முறையும், அதிமுக இருமுறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. 2006-, 2011- ஆகிய இரு தேர்தல்களில் எஸ். குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) வென்றுள்ளார். 2016 தேர்தலில் ஜி.பாஸ்கரன் (அதிமுக).
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
சிவகங்கை வட்டம், காரைக்குடி வட்டம் (பகுதி)
கீரணிப்பட்டி, கூத்தலூர், வரிவயல், சேதுரெகுநாதபட்டிணம், பிலார், தேவப்பட்டு, கல்லல், சம்பனூர், அரண்மனை சிறுவயல், குருடம்பட்டு, சன்னவனம், வேப்பங்குளம், விளாவடியேந்தல், ஆலம்பட்டு, கீழ்ப்பூங்குடி, திருத்திபட்டி, பனங்குடி, இலந்தமங்களம், மும்முடிச்சான்பட்டி,
மலைகண்டான் மற்றும் வெற்றியூர் கிராமங்கள்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
பெண்
மூன்றாம் பாலினத்தவர்
2
மொத்த வாக்காளர்கள்
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
க.பாஸ்கரன்
அதிமுக
2
ம.சத்தியநாதன்
திமுக
3
எஸ்.குணசேகரன்
இந்திய கம்யூ
4
ந.ராஜசேகரன்
பாமக
5
சி.குழந்தை சாமி
ஐகேகே
6
ராம.கோட்டைக்குமார்
நாம் தமிழர்
7
மா.ஸ்ரீதர்வாண்டையார்
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு
2011
S.குணசேகரன்
இந்திய கம்யூனிஸ்ட்கட்சி
2006
S.குணசேகரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
34.14
2001
V.சந்திரன்
அதிமுக
48.68
1996
தா. கிருட்டிணன்
திமுக
60.65
1991
K.R.முருகானந்தம்
அதிமுக
72.69
1989
B.மனோகரன்
திமுக
33.98
1984
O.சுப்பிரணியன்
இ.தே.கா
55.92
1980
O.சுப்பிரணியன்
இ.தே.கா
56.94
1977
O.சுப்பிரணியன்
இ.தே.கா
30.59
1971
சேதுராமன்
தி.மு.க
1967
சேதுராமன்
தி.மு.க
1962
ஆர். வி. சுவாமிநாதன்
இ.தே.கா
1957
சுப்பிரணியராஜ்குமார்
சுயேட்சை
1952
ஆர். வி. சுவாமிநாதன்
இ.தே.கா
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
S. குணசேகரன்
சி.பி.ஐ
39488
2
S. செவந்தியப்பன்
ம.தி.மு.க
33375
3
V. ராஜசேகரன்
சுயேச்சை
30740
4
C.R. பாலு
தேமுதிக
6114
5
தனலக்ஷ்மி
சுயேச்சை
1730
6
S.R. சுவாமிநாதன்
பாஜக
1667
7
M. செல்வம்
சுயேச்சை
792
8
M. சுந்தரப்பாண்டியன்
சுயேச்சை
657
9
M. செல்வராஜ்
பகுஜன் சமாஜ் கட்சி
561
10
R. ராஜத்துரை
ஏ.ஐ.எப்.பி
551
115675
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
S.குணசேகரன்
சி.பி.ஐ
75176
2
V.ராஜசேகரன்
காங்கிரஸ்
70794
3
P.M.ராஜேந்திரன்
பாஜக
2957
4
C.குழந்தைசாமி
ஐ.ஜே.கே
2484
5
R.காந்தி
சுயேச்சை
1815
6
M.காளீஸ்வரன்
ஜே.எம்.எம்
1725
7
P.சுப்ரமணியன்
சுயேச்சை
1636
8
J.ராஜ்குமார்
பகுஜன் சமாஜ் கட்சி
629
157216
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago