195 - திருப்பரங்குன்றம்

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி ராஜன் செல்லப்பா அதிமுக எஸ்.கே.பொன்னுத்தாய் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) திமுக கே.டேவிட் அண்ணாதுரை அமமுக எம்.பரணிராஜன் மக்கள் நீதி மய்யம் இரா.ரேவதி நாம் தமிழர் கட்சி

முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தை உள்ளடக்கிய இத்தொகுதி. மதுரை சர்வதேச விமான நிலையம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், வடபழஞ்சி ஐ.டி. பார்க், நியூட்ரினோ ஆய்வு மையம் இத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனையும், தோப்பூர் துணைக்கோள் நகரின் பெரும்பகுதியும் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன.

திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி அவனியாபுரம் ஆகிய முக்கிய பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. மேலும் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திலுள்ள கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தின் 2-வது பெரிய தொகுதி. தே.மு.தி.க. கட்சி துவக்கியது உள்ளிட்ட பல கட்சிகளின் பிரமாண்ட மாநாடுகள் இத்தொகுதியில் நடந்துள்ளன. அடுத்தடுத்து 2 முறை இடைத்தேர்தல்களை சந்தித்த தொகுதியும் கூட.

தனியார் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள் அதிகமாக இயங்கி வருகின்றன. விவசாயிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் பரவலாக வசித்து வருகின்றனர். வைகை பாசன கால்வாய் அமைக்காதது, நறுமண தொழிற்சாலை, பூக்களுக்கான குளிர்விப்பு கிடங்கு, சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை விரிவாக்கம் செய் யப்படாதது போன்ற பல்வேறு பிரச்சனைகள் நீண்ட காலமாக உள்ளன.

1957-ம் ஆண்டு முதல் இதுவரை 13 முறை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 2 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. ஒருமுறையும், பார்வர்டு பிளாக் கட்சி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்து இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

2006-ம் ஆண்டு தேர்தலில் ஏ.கே.போஸ்(அதிமுக) வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் ஏ.கே.டி.ராஜா(தேமுதிக) வெற்றி பெற்றார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

மதுரை தெற்கு தாலுகா (பகுதி)

திருப்பரங்குன்றம், விளாச்சேரி, வடிவேல்கரை, தட்டானூர், கிழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, சக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தோப்பூர், தனக்கன்குளம், சிந்தாமணி, பிராகுடி, கல்லம்பல், ஐராவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனைபூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமானேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி,

முல்லாகுளம், வாலானேந்தல், நிலைபூர், பெரிய ஆலங்குளம், சூரக்குளம், வலையப்பட்டி, தொட்டியபட்டி, வலையங்குளம், பாப்பானோடை, இராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், மூத்தான்குளம், பனைக்குளம், சோளங்குருணி, எலியார்பதி, நெடுமதுரை, கொடும்பாடி, ஓத்தைஆலங்குளம், பெரியகூடக்கோயி, பாரைபதி, நல்லூர் மற்றும் நெடுங்குளம் கிராமங்கள்,சின்ன அனுப்பானடி (சென்சஸ் டவுன்), அவனியாபுரம் (பேரூராட்சி), திருப்பரங்குன்றம் (பேரூராட்சி), ஹார்விபட்டி (பேரூராட்சி) மற்றும் திருநகர் (பேரூராட்சி).

தொகுதியின் பிரச்சினைகள்

இத்தொகுதியில் முக்கியமாக எதிர்பார்க்கும் திட்டங்களில் ஒன்று சர்வதேச விமான நிலையம், மற்றொன்று எய்ம்ஸ் மருத்துவமனை . இவை முழுமை பெறும்போது, இத்தொகுதி இந்தியள வில் பேசப்படும். மதுரை மாநக ராட்சி குப்பைகளை சேகரிக்கும் வெள்ளக்கல் பகுதி இத்தொகுதிக்குள் வருகிறது. குப்பைகளை சுத்திகரிப்பு செய்தாலும், சுற்றியுள்ள அவனியா புரம், தந்தை பெரியார் நகர் போன்ற பகுதிகள் பாதிக்கப்படுகிறது. இதை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்ற மக்கள் கோரிக்கை விடுகின்றனர். இத்தொகுதிக்கு உட்பட்ட நகர்,

கிராமப்புறங்களில் குடிநீர், சாலை மேம்பாடு இருந்தாலும், திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் பாதாளச்சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டமாக உள்ளது. இத்தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் (கள்ளர், பிறமலைக் கள்ளர், மறவர், அகமுடை யார்) சமூகத்தினர் 50 சதவீதத்திற்கு மேலும், பிற சமூகத்தினர் 50 சதவீதம் பேரும் வசிக்கின்றனர். இதுவரை நடந்த தேர்தல்களில் பெரும்பாலும் முக்குலத்தோர் சமூகத்தினரே எம்ஏஎல்-வாக தேர் வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 தேர்தலில் களம் கண்ட வேட்பாளர்கள் விவரம்:

1. எம்.எஸ்.சீனிவேல்( அதிமுக) வெற்றி -93,453

2. மு. மணிமாறன் (திமுக) -70,461

3. கந்தசாமி (சுயே) -15,275

4. ஆறுமுகம் பிள்ளை (BJP)-7,698

5. நோட்டா(Others) -3,111

6. சு. பாலமுருகன் (பாமக) -1,237

சுயேட்சை, மற்றவர்கள்- 15

வெற்றி வித்தியாசம் -22,992

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,50,886

பெண்

1,55,619

மூன்றாம் பாலினத்தவர்

29

மொத்த வாக்காளர்கள்

3,06,534

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

ராஜா.A.K.T

தேமுதிக

58.7

2006

A.K.போஸ்

அதிமுக

42.81

2001

S.M.சீனிவேல்

அதிமுக

48.93

1996

C.இராமச்சந்திரன்

திமுக

60.75

1991

S.ஆண்டித்தேவர்

அதிமுக

59.6

1989

C.இராமச்சந்திரன்

திமுக

43.55

1984

M.மாரிமுத்து

அதிமுக

53.47

1980

கா.காளிமுத்து

அதிமுக

60.53

1977

கா.காளிமுத்து

அதிமுக

41.39

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

போஸ்.A.K

அதிமுக

117306

2

வெங்கடேசன்.S

மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

104620

3

ராஜமாணிக்கம்.G

தேமுதிக

40684

4

சுரேந்திரன்.S

பாஜக

4482

5

மகாலிங்கம்.V (அ) சிற்றரசு

பகுஜன் சமாஜ் கட்சி

1595

6

கந்தசாமி.K

சுயேச்சை

1476

7

ஈஸ்வரன்.G

ஐக்கிய ஜனதா தளம்

1348

8

சரத்பாபு.C

சுயேச்சை

1031

9

ஜெயக்குமார்.M

சுயேச்சை

929

10

பரமன்.P.M

சுயேச்சை

543

274014

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ராஜா.A.K.T

தேமுதிக

95469

2

சுந்தரராஜன்

காங்கிரஸ்

46967

3

ஆறுமுகம்

சுயேச்சை

9793

4

கந்தன்

பாஜக

3543

5

செல்வம்

பகுஜன் சமாஜ் கட்சி

1251

6

சாந்திபூசன்

சுயேச்சை

1023

7

நாகமணி

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

865

8

பாலச்சந்திரன்

சுயேச்சை

791

9

அழகு முத்து வேலாயுதம்

சுயேச்சை

660

10

வேலு

சுயேச்சை

635

11

வரதராஜன்

சுயேச்சை

633

12

செல்லராஜ் (அ) தமிழ்வணணன்

சுயேச்சை

504

13

ஆறுமுகம்

சுயேச்சை

496

162630

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்