233 - விளவங்கோடு

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி ஜெயசீலன் (பாஜக) அதிமுக விஜயதரணி (காங்கிரஸ்) திமுக எல்.ஐடன்சோனி அமமுக அருள்மணி மக்கள் நீதி மய்யம் லி.மேரி ஆட்லின் நாம் தமிழர் கட்சி

தமிழகத்தின் கடைக்கோடி தொகுதி இது மலையாள மொழி பேசும் மக்களும் கணிசமாக உள்ளனர். தேசிய கட்சிகள் கோலோச்சும் தொகுதிகளில் முக்கியமான தொகுதி இது. தொகுதிக்குள் எதிர்பார்ப்புகளும், பிரச்னைகளும் அடுக்கடுக்காய் உள்ளது.

குழித்துறை நகராட்சி, கடையல், அருமனை, இடைக்கோடு, பளுகல், பாகோடு, உண்ணாமலைக்கடை, நல்லூர், களியக்காவிளை, பேரூராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகள் இத்தொகுதிக்குள் வருகின்றன.

தொகுதிக்குள் நாடார் சமூக வாக்குகள் பெரும்பான்மையாக உள்ளது.அதற்கு அடுத்த இடத்தில் நாயர் சமூக வாக்குகள் உள்ளது.

தொகுதி மக்களின் பிரச்சினைகள்

தொகுதி மக்களின் பிரதான தொழில்கள் ரப்பர்சாகுபடி, தேனீ வளர்ப்புத் தொழில். வெளிநாடுகளில் இருந்து ரப்பரை அதிக அளவில் இறக்குமதி செய்வதனால் உள்ளூரில் ரப்பருக்கு உரிய விலை இல்லை.

இதே போல் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் கிடக்கின்றது.இதே போல் ரப்பர் தொழிற்சாலை, ரப்பர் ஆராய்ச்சி மையக் கோரிக்கையும் நிறைவேற்றவில்லை.

இத்தொகுதிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேனீ வளர்ப்பை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர்.ஆனால் இங்கு தேனீக்களுக்கு நோய் ஏற்படும் பொழுது தீர்வு பெறுவதற்கு தேனீ ஆராய்ச்சி மையம் கூட இல்லை.

தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு நெய்யாறு இடதுகரை சானல் மூலம் தண்ணீர் வந்தது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் கேரளம், தமிழகத்தின் விளவங்கோடு வட்ட விவசாயிகள் பயன்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு கட்டப்பட்டது இது.

ஆனால் கடந்த 2004ம் ஆண்டு கேரள அரசு தன்னிச்சையாக நிறுத்த, தமிழக அரசு சார்பில் வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. இப்பகுதியில் இருந்த சாகுபடி பரப்பும் கணிசமாக குறைந்துவிட்டது.

மார்க்சிஸ்ட் கட்சி 5 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரு தேர்தலில்களிலும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி வெற்றி பெற்றுள்ளார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,18,876

பெண்

1,23,700

மூன்றாம் பாலினத்தவர்

19

மொத்த வாக்காளர்கள்

2,42,595

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

விஜய தரணி

இ.தே.கா

-

2006

G . ஜான் ஜோசப்

மார்க்சிய கம்யூனிச கட்சி

53.74

2001

D.மணி

மார்க்சிய கம்யூனிச கட்சி

56.75

1996

D.மணி

மார்க்சிய கம்யூனிச கட்சி

43.35

1991

M.சுந்தரதாஸ்

இ.தே.கா

48.86

1989

M.சுந்தரதாஸ்

இ.தே.கா

42.25

1984

M.சுந்தரதாஸ்

இ.தே.கா

57.49

1980

D.மணி

மார்க்சிய கம்யூனிச கட்சி

53.66

1977

D.ஞானசிகாமணி

மார்க்சிய கம்யூனிச கட்சி

48.85

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

G.ஜான் ஜோசப்

சி.பி.ஐ

64532

2

F. பிரான்க்ளின்

அ.தி.மு.க

19458

3

பொன் விஜயா ராகவன்

என்.சி.பி

13434

4

L. தேவதாஸ்

பாஜக

12553

5

L. ஐடன் சோனி

தே.மு.தி.க

7309

6

E. ஜார்ஜ்

சுயேச்சை

1182

7

Y. ராஜதாசன்

பி.எஸ்.பி

532

8

S.வேல்குமார்

எ.பி.எச்.எம்

423

9

K. பிரபாகரன்

சுயேட்சை

334

10

V. ஞானமுதன்

சுயேட்சை

319

120076

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S.விஜய தரணி

காங்கிரஸ்

62898

2

R. லீமாரோஸ்

சி.பி.எம்

39109

3

R. ஜெயசீலன்

பாஜக

37763

4

T. வில்சன்

சுயேச்சை

1144

5

B.பிரமோத்

பி.எஸ்.பி

911

6

A. முருகேசன்

சுயேச்சை

687

7

K. வெங்கடேசன்

எ.பி.எச்.எம்

559

8

C.P. ராதாகிருஷ்ணன்

சுயேச்சை

498

9

V. ஞானமுதன்

சுயேச்சை

379

143948

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்