2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
குமரியின் துறைமுக தொகுதி என்ற அந்தஸ்து பெற்றது. ரீத்தாபுரம், கல்லுக்கூட்டம், மண்டைக்காடு, திங்கள்நகர், வெள்ளிமலை பேரூராட்சிகளையும், முட்டம், வெள்ளிச்சந்தை, குருந்தன்கோடு போன்ற உள்ளாட்சிகளையும் உள்ளடக்கியது. தமிழக, கேரளவியாபாரிகள் வந்து செல்லும் சிறந்த வர்த்தக பகுதியாகவும் குளச்சல் உள்ளது.இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என அனைத்து மதத்தினரும் இத்தொகுதியில் உள்ளனர். மீன்பிடித்தொழில், விவசாயம், தென்னைநார் தொழிற்சாலைகள், படகுகட்டும் தொழில்கள் நிறைந்துள்ளன. ஆழ்கடலில் சுறா, மற்றும் உயர்ரக மீன்களைபிடிக்கும் திறமைவாய்ந்த மீனவர்கள் இங்கு நிறைந்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குளச்சலில் உள்ள காணிக்கை மாதா ஆலயம், மற்றும் குளச்சல் பள்ளிவாசல் ஆகியவை சிறந்த ஆன்மீக தலங்களாக உள்ளன. முட்டம் கடற்கரை, குளச்சல் துறைமுக பகுதி ஆகியவை சிறந்த சுற்றுலா தலங்களாக உள்ளன.
தொகுதி மக்கள் கோரிக்கைகள்
கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிப்பதற்கான தகவல் தொழில்நுட்பமோ, அதிநவீன கருவிகளோ, ஹெலிகாப்டரோ, நவீன ரோந்து படகுவசதியோ செய்யப்படாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது. மீன்பிடி தொழிலுக்கு போதிய பாதுகாப்பு செய்துதரவில்லை என்பதே இங்குள்ள மீனவர்களின் பெரும்குறையாக உள்ளது.
தென்னைநார் தொறிற்சாலை, மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் பதனிடும் நிலையம், முட்டத்தில் ஏற்கனவே இருந்தது போல் தொழில்நுட்பத்துடன் கூடிய படகு கட்டும் தளம் அமைத்தல், தரமில்லாத சாலைகளால் போக்குவரத்து சிரமம், கூவம் ஆறுபோன்று மாறிவரும் ஏவிஎம் கால்வாயை தூர்வாரவேண்டும், மணல் ஆலை கதிர்வீச்சால் கடற்கரை பகுதியில் புற்றுநோய் போன்ற பாதிப்பால் வாழ்வை இழக்கும் மக்களுக்கு நிரந்தர சுகாதார பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்றஅடுக்கடுக்கான மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைந்துள்ளன.
சட்டப்பேரவை தேர்தலில் 6 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை ஜனதா கட்சியும், தலா இருமுறை அதிமுகவும், திமுகவும்வெற்றி பெற்றுள்ளன. கடந்த இரு தேர்தலில்களிலும் தொடர்ச்சியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரின்ஸ் வெற்றி பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,32,349
பெண்
1,29,130
மூன்றாம் பாலினத்தவர்
15
மொத்த வாக்காளர்கள்
2,61,494
.2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு (%)
2011
ஜெ.ஜெ.பிரின்ஸ்
இ.தே.கா
2006
S. ஜெயபால்
இ.தே.கா
46.99
2001
T.பச்சமால்
அதிமுக
46.23
1996
இரா.பெர்னார்ட்
திமுக
42.85
1991
A.பவுலய்யா
இ.தே.கா
60.01
1989
A.பவுலய்யா
இ.தே.கா
39.19
1984
F.M.இராஜ ரெத்தினம்
அதிமுக
39.33
1980
ரெத்தினராஜ்
திமுக
67.03
1977
R.ஆதிசுவாமி
ஜனதா கட்சி
30.4
2006 தேர்தல் ஒரு பார்வை
வ எண்
பெயர்
கட்சி
வாக்குகள்
1
S. ஜெயபால்
காங்கிரஸ்
50641
2
M.R. காந்தி
பாஜக
29321
3
K.T. பச்சைமால்
அ.தி.மு.க
20413
4
S. வெலிங்டன்
தே.மு.தி.க
4941
5
C. லிங்கபெருமாள்
சுயேச்சை
656
6
K. சுரேந்திர நாயர்
எ.பி.எச்.எம்
626
7
S.N. தர்மேந்திர குமார்
பி.எஸ்.பி
449
8
S. தாமஸ்
சுயேச்சை
310
9
H. குமாரசாமி
சுயேச்சை
164
10
கருணாகரன்
சுயேச்சை
142
11
C. பாலகிருஷ்ணன்
சுயேச்சை
109
10772
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
J.G. பிரின்ஸ்
காங்கிரஸ்
58428
2
P. லாரன்ஸ்
அ.தி.மு.க
46607
3
P. ரமேஷ்
பாஜக
35778
4
S.M. அந்தோணி முத்து
சி.பி.ஐ
1566
5
G. வர்கீஸ் தர்மராஜ்
சுயேச்சை
1262
6
A.P. அபுதாஹிர்
பி.எஸ்.பி
872
7
V. கதிரேசன்
சுயேச்சை
537
8
M. செல்வராஜ்
எ.பி.எச்.எம்
438
145488
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago