127 - பழனி

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி ரவிமனோகரன் அதிமுக செந்தில்குமார் திமுக வி.வீரக்குமார் அமமுக பி. பொன்வேந்தன் மக்கள் நீதி மய்யம் கு.வினோத் ராஜசேகரன் நாம் தமிழர் கட்சி

திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதியில் ஆன்மீகதலமான பழநி மட்டுமின்றி சுற்றுதலாமான கொடைக்கானலும் அமைந்துள்ளது. 2006 ம்ஆண்டு வர தனித்தொகுதியாக இருந்த பழநி தொகுதி சீரமைப்புக்கு பின் பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. மேலும் 2011 தேர்தலில் எல்லைகள் மாற்றப்பட்டு பெரியகுளம் தொகுதியில் இருந்த கொடைக்கானல் மலைப்பகுதி பழநி தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.

பழநி சட்டசபை தொகுதியில் பழநி நகராட்சி, கொடைக்கானல் நகராட்சி, பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்காரப்பட்டி, பண்ணைக்காடு ஆகிய பேரூராட்சிகள், பழநி ஒன்றியத்திற்குட்பட்ட 17 கிராம ஊராட்சிகள், கொடைக்கானல் ஒன்றியத்திற்குட்பட்ட மலைகிராமங்கள் அடங்கியுள்ளது. முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாக பழநி தொகுதி உள்ளது.

பழநிக்கு அதிகளவில் பக்தர்கள் வருகைதரும்நிலையில் அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

கொடைக்கானலில் பல சுற்றுலாத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளதால் சுற்றுலாவளர்ச்சி என்பதே இல்லை. பழநி நகரின் மத்தியில் அமைந்துள்ள வையாபுரி கண்மாய் கழிவுநீர் தேங்கும் இடமாக மாறி, நகர் முழுவதும் நோய்பரப்பும் விதமாக கழிவுநீர் தேங்குவது தொடர்கிறது. பச்சயையாற்றின் குறுக்கே அணைக்கட்டவேண்டும் என்ற இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கொடைக்கானல் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் குண்டாறு திட்டப் பணிகள் முடிவடையாமல் உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதியில்லாததால், சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் சீசன் நேரத்தில் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பது தொடர்கிறது.

அறுவடை செய்யப்படும் மலை காய்கறிகளை சந்தைப்படுத்த மதுரை, பெரியகுளம் செல்லவேண்டிய நிலை உள்ளது. மலையடிவாரத்தில் அல்லது கொடைக்கானலில் மெகா மார்க்கெட் அமைத்தால் மலை விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக இருக்கும்.

1977 ஆண்டு முதல் நடந்த தேரத்லில் 10 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக தலா மூன்று முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. 1991 முதல் திமுக, அதிமுக மாறி மாறி இந்ததொகுதியை கைப்பற்றி வருகிறது. தற்போது எம்.எல்.ஏ., வாக திமுக வை சேர்ந்த இ.பெ.செந்தில்குமார் உள்ளார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

132220

பெண்

137463

மூன்றாம் பாலினத்தவர்

31

மொத்த வாக்காளர்கள்

269714

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ப.குமாரசாமி

அதிமுக

2

இ.பெ.செந்தில்குமார்

திமுக

3

வ.ராஜமாணிக்கம்

மார்க்சிஸ்ட்

4

பி.நாகராஜன்

பாமக

5

என்.கனகராஜ்

பாஜக

6

கு.வினோத்ராஜசேரன்

நாம் தமிழர்

கொடைக்கனல் தாலுகா (பகுதி)

அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி(வடக்கு), சித்திரைகுளம், ஆர்.வாடிப்பட்டி(வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு, தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தன்நாயக்கன்பட்டி, ஏ.காளையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்களம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிக்க நாயக்கன்பட்டி, கோதைமங்களம், பச்சலை நாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, பழனி, சிவகிரிபட்டி மற்றும் தட்டான்குளம் கிராமங்கள்,

பழனி (நகராட்சி), பாலசமுத்திரம் (பேரூராட்சி), ஆயக்குடி (பேரூராட்சி) மற்றும் நெய்காரபட்டி (பேரூராட்சி)

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

இதுவரை வென்றவர்கள் 1977 முதல்

சட்டமன்ற தேர்தல் ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2006

M.அன்பழகன்

திமுக

47.5

2001

M.சின்னசாமி

அதிமுக

55.65

1996

T.பூவேந்தன்

திமுக

57.87

1991

A.சுப்புரத்தினம்

அதிமுக

68.14

1989

N.பழனிவேல்

மார்க்சிய கம்யூனிச கட்சி

33.21

1984

ஏ.எஸ்.பொன்னம்மாள்

இ.தே.கா

66.27

1980

N.பழனிவேல்

மார்க்சிய கம்யூனிச கட்சி

53.12

1977

N.பழனிவேல்

மார்க்சிய கம்யூனிச கட்சி

34.53

2006 சட்டமன்ற தேர்தல்

127.பழநி

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

M. அன்பழகன்

தி.மு.க

57181

2

S. பிரேமா

அ.தி.மு.க

46272

3

P.K. சுந்தரம்

தே.மு.தி.க

11369

4

சின்னப்பன்

பி.ஜே.பி

1651

5

S. பெரியசாமி

சுயேச்சை

1580

6

S. விஜயகுமார்

பி.எஸ்.பி

849

7

P. சாமிகண்ணு

சுயேச்சை

478

8

K. துண்டையன்

சுயேச்சை

418

9

K. குமார்

சுயேச்சை

319

10

M. குப்புசாமி

சுயேச்சை

269

120386

2011சட்டமன்ற தேர்தல்

127.பழநி

வ எண்

பெயர்

கட்சி

வாக்குகள்

1

K.S.N. வேணுகோபாலு

அ.தி.மு.க

82051

2

I.P. செந்தில்குமார்

தி.மு.க

80297

3

K. தீனதயாளன்

பி.ஜே.பி

1745

4

A. வெங்கடசாமி

சுயேச்சை

1442

5

R. சிவகுமார்

சுயேச்சை

1066

6

P. ஜெயசந்திரன்

எல்.ஜே.பி

884

7

K. தாயார் சுல்தான்

பி.எஸ்.பி

547

8

R. செல்வகுமார்

சுயேச்சை

433

9

T. லதா

சுயேச்சை

290

10

G. நாகேந்திரன்

சுயேச்சை

262

11

K. சின்னராஜ்

சுயேச்சை

251

12

N. ஈஸ்வரன்

சுயேச்சை

224

13

C. கண்ணன்

சுயேச்சை

160

14

A. அன்பரசன்

சுயேச்சை

151

15

N.V. இளங்கோவன்

சுயேச்சை

81

169884

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்