2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய தொகுதி கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியாகும். தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 117-வது இடத்தில் உள்ளது. அவிநாசி சாலையை மையப்படுத்தி அமைந்துள்ள தொகுதிகளில் இதுவும் ஒன்று. கவுண்டம்பாளையம் என்ற நகரை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட தொகுதி. மாநகராட்சியின் 22 வார்டுகள் இந்தத் தொகுதியில் வருகின்றன. நொய்யல் நதிக்கும், பவானி ஆற்றுக்கும் இடையே உருவாகி திருப்பூர் மாவட்டத்தில் நொய்யலில் கலக்கும், கவுசிகா நதியும் இந்தத் தொகுதியில் தான் உள்ளது. அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோயில், காளப்பட்டி மாரியம்மன் கோயில் ஆகியவை இந்தத் தொகுதியில் தான் அமைந்துள்ளன.
கவுண்டர் சமுதாயத்தினர், ஒக்கலிக கவுடர்கள் பெரும்பான்மையாக இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர். அதேபோல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இதர சமூக மக்களும் இந்தத் தொகுதியில் குறிப்பிட்ட சதவீதம் வசிக்கின்றனர். விவசாயம் இத்தொகுதி மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது. அதேபோல், செங்கல் உற்பத்தி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழிற்பேட்டைகள் ஆகியவையும் இந்தத் தொகுதியில் உள்ளன. குறிப்பாக செங்கல் சூளைகள், குறுந்தொழில் நிறுவனங்கள், பல்வேறு பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள், இத்தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கிய வேலை வாய்ப்பு கேந்திரமாக உள்ளது.
கோரிக்கைகள் :
பாழடைந்து பயனின்றி கிடக்கும் கெளசிகா நதியை மேம்படுத்திட வேண்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அவிநாசி சாலை முதல் சத்தி சாலையை இணைக்கம் வகையில் உள்ள இந்ததொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள இணைப்புச்சாலையை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்திட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும், காளப்பட்டி நான்குமுனை சந்திப்புப் பகுதியை அகலப்படுத்திட வேண்டும். தொழில்துறையினருக்கு பயன் அளிக்கும் வகையில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவாக முடித்திட வேண்டும். இத்தொகுதியை மையப்படுத்தி தொழிற்பேட்டையை ஏற்படுத்திட வேண்டும். செங்கல் சூளைகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவமனை கட்டமைப்புகளை மேம்படுத்திட வேண்டும். இத்தொகுதியை மையப்படுத்தி அரசு கலைக்கல்லூரி ஏற்படுத்திட வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதேபோல், மோட்டார், பம்புசெட், கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திட, மூலப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கிக் கடன் எளிதாக கிடைக்க உதவிட வேண்டும் என்பது போன்றவை இந்தத் தொகுதிக்குட்பட்ட தொழில்துறையினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இத்தொகுதியில் உள்ள பகுதிகள்:
மாநகராட்சியின் 1,2,3,4,5,6,7,8,9,26,27,28, 29,30, 31,32, 33, 34,35,36,42,43 ஆகிய வார்டுகள் வருகின்றன. வடக்கு தாலுக்காவுக்கு உட்பட்ட வெள்ளமடை, கொண்டையம்பாளையம், எஸ்.எஸ்.குளம், நாயக்கன்பாளையம், தடாகம், ஆனைக்கட்டியின் குறிப்பிட்ட பகுதிகள், வீரபாண்டி, சின்னத் தடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, கீரணத்தம், கள்ளிப்பளையம், வெள்ளாணைப்பட்டி கிராமங்கள் ஆகியவை வருகின்றன. மேலும், பெரியநாயக்கன்பாயைம் பேரூராட்சிப் பகுதிகள், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிப் பகுதிகள், இடிகரை பேரூராட்சிப் பகுதிகள், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் இந்தத் தொகுதியில் வருகின்றன.
கடந்த 2016-ம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.ஆறுக்குட்டி 1,10,870 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஆர்.கிருஷ்ணன் 1,02,845 வாக்குகள், பாஜகவின் ஆர்.நந்தகுமார் 22,444 வாக்குகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வி.ராமமூர்த்தி 16,874 வாக்குகள் பெற்றனர்.
கடந்த 2011-ம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.ஆறுக்குட்டி 1,37,058 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் டி.பி.சுப்பிரமணியன் 67,798 வாக்குகள் பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
பெண்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்த வாக்காளர்கள்
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
வி.சி.ஆறுக்குட்டி
அதிமுக
2
ஆர்.கிருஷ்ணன் (எ) பையாக்கவுண்டர்
திமுக
3
வி.ராமமூர்த்தி
மார்க்ச
ஸ்ட்
4
ஏ.தங்கவேலு
பாமக
5
ஆர்.நந்தகுமார்
பாஜக
6.
பி.கவுசல்யா
நாம் தமிழர்
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
ஆறுகுட்டி.V.C
அதிமுக
137058
2
சுப்பிரமணியன்.T.P
திமுக
67798
3
நந்தகுமார்.R
பாஜக
6175
4
கணேசன்.D
சுயேச்சை
1749
5
வசந்தகுமார்.D
சுயேச்சை
1436
6
விஸ்வநாதன்.V
லோக் சட்ட கட்சி
1331
7
பார்த்திபன்.P
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
654
8
குமணன்.R
சுயேச்சை
584
216785
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago