2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின்போது தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரித்து கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
கொளத்தூர், பெரவள்ளூர், செந்தில் நகர், சீனிவாச நகர், அயனாவரம், பெரியார் நகர், பூம்புகார் நகர், ஜவகர் நகர், செம்பியம் ஆகிய பகுதிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
சென்னை மாநகரின் மையமான சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து 10 கி.மீ. தொலைவில் கொளத்தூர் அமைந்துள்ளது. இதனால் வட சென்னையில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக உள்ளது. சென்னை உள்வட்டச் சாலை கொளத்தூர் தொகுதி வழியாகச் செல்வதால் போக்குவரத்து எளிதாகியுள்ளது.
கொளத்தூரில் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் மிக அதிகமாக வசிக்கின்றனர். புதிதாக வளர்ச்சியடைந்த புறநகர் பகுதி என்பதால் வெளிமாவட்ட, மாநில மக்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களை குறிவைத்தே அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன.
மழைக்காலங்களில் கொளத்தூர் மிகப்பெரிய பாதிப்பு எதிர்கொண்டு வருகிறது. குடிநீரில் கழிவுநீர் கலப்பு, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுதல், தண்ணீர் தேங்குதல், கொசுத்தொல்லை என வட சென்னைக்கே உரித்தான பிரச்சினைகள் இங்கும் உண்டு.
முதல் முறையாக கடந்த 2011-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக பொருளாளரும், அன்றைய துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் இங்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி களமிறக்கப்பட்டார். இதனால் தமிழகத்தின் மிகப் பரபரப்பான தொகுதியாக மாறியது. மு.க.ஸ்டாலின் 68 ஆயிரத்து 677 வாக்குகளும், சைதை துரைசாமி 65 ஆயிரத்து 943 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் 4 ஆயிரத்து வாக்குகளும் பெற்றனர்.
மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதால், 2016 தேர்தலில் மீண்டும் இங்கு போட்டியிட்ட ஸ்டாலின், தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே, தொகுதி முழுவதும் 'பேசலாம் வாங்க' என்ற தலைப்பில் தொகுதி மக்களுடன் கலந்துரையாடினார். தேர்தல் களத்திலும் ஸ்டாலின் மட்டுமல்லாது அவரது மனைவி துர்காவும் தீவிர பிரசாரம் செய்தனர். அதற்கு பெரும் பலன் கிடைக்கவே செய்தது.
2011-ல் வெறும் 2 ஆயிரத்து 734 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழை வித்தியாசத்தில் வென்ற ஸ்டாலின், 2016-ல் 91 ஆயிரத்து 303 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் ஜே.சி.பிரபாகரனை 37 ஆயிரத்து 730 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 5,289, பாமக 3,011, நாம் தமிழர் கட்சி 2,820 வாக்குகளையும் பெற்றன.
வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதனால் இந்தத் தேர்தலிலும் கொளத்தூர் நட்சத்திர தொகுதி அந்தஸ்தைப் பெறுகிறது.
கொளத்தூரில் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் மிக அதிகமாக வசிக்கின்றனர். புதிதாக வளர்ச்சியடைந்த புறநகர் பகுதி என்பதால் வெளிமாவட்ட, மாநில மக்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களை குறிவைத்தே அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
பெண்
மூன்றாம் பாலினத்தவர்
68
மொத்த வாக்காளர்கள்
2,82,299
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
மு க ஸ்டாலின்
திமுக
68677
2
சைதை துரைசாமி
அதிமுக
65943
3
ஆம்ஸ்ட்ராங்
பி எஸ் பி
4004
4
ஷங்கர்
சுயேச்சை
778
5
அசோக் குமார்
எல்எஸ்பி
502
6
சிவகுமார்
ஐ ஜே கே
285
7
சரவணன்
சுயேச்சை
193
8
சூரியநாராயணன்
சுயேச்சை
187
9
சுரேஷ்
சுயேச்சை
185
10
ஜெயராமராஜ்
சுயேச்சை
160
11
சிவசுப்ரமணி
சுயேச்சை
157
12
பத்மராஜன்
சுயேச்சை
114
13
வெங்கடரமணி
சுயேச்சை
89
14
அடிக் எஸ்டன்
ஆர் பி ஐ
83
15
சரவணன்
சுயேச்சை
72
16
அழகேசன்
சுயேச்சை
67
17
ஜெயசீலன்
சுயேச்சை
66
18
வேணுகோபால்
சுயேச்சை
56
19
அயனராவ்
சுயேச்சை
55
20
ரவிக்குமார்
சுயேச்சை
54
21
கோபி
சுயேச்சை
53
22
கந்தசாமி
சுயேச்சை
51
23
கணேசன்
சுயேச்சை
50
24
முரளிவினோத்
சுயேச்சை
41
25
கலையரசன்
சுயேச்சை
41
26
ரமேஷ்
சுயேச்சை
34
27
ரகு
சுயேச்சை
31
142028
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago