‘நாம் தமிழர்’ வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

வரும் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மார்ச் 14-ம் தேதி வரை முதல்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அக்கட்சி அறிவித்தள்ளது.

வரும் ஏப்.6-ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. குறைவான நாட்களே இருக்கும் நிலையில், அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் சில கட்சிகளிடையே இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னையில் நேற்று முன்தினம் ஒரேமேடையில் சீமான் அறிமுகப்படுத்தினார். உடனடியாக தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தையும் தொடங்கி உள்ளார்.

இதுகுறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் நா.சந்திரசேகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மார்ச் 9-ம் தேதி மாலை 4 மணி முதல் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், 10-ம் தேதி மாலை 4 மணி முதல் பூந்தமல்லி, பெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, 11-ம் தேதி காலை 10 மணி முதல் ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ஆற்காடு, வேலூர், மாலை 4 மணி முதல் அணைக்கட்டு, கீழ்வைத்தியனாங் குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்,

மார்ச் 12-ம் தேதி காலை 10 மணி முதல் கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி, பாலக்கோடு, பென்னாகரம், மாலை 4 மணி முதல் தர்மபுரி, மேட்டூர், ஓமலூர், இரவு 8 மணிக்கு சேலம் பொதுக்கூட்டம். 13-ம் தேதி காலை 10 மணி முதல் ஏற்காடு, ஆத்தூர், கெங்கவள்ளி, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, மாலை 4 மணி முதல் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம். 14-ம் தேதி மாலை 4 மணி முதல் சென்னை மற்றும் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்