சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்ணிவாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாநாட்டில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட இருந்தது. இருப்பினும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளின் காரணமாக மாநில மாநாடு ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் நாளை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் எனஅறிவித்துள்ளார். வீட்டில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். எங்களுடைய அறிவிப்பை தான் அப்படியே திமுக வெளியிட்டுள்ளது. எனவே, பெண்கள் சார்ந்த புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளை இணைத்து தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுவதற்கான பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago