தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 7 ஆயிரத்து 967 பேர்விருப்ப அளித்திருந்தனர். அவர்களுடனான நேர்காணல் மாவட்ட வாரியாக கடந்த மார்ச் 2-ம்தேதி முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வந்தது.அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்பாலு உள்ளிட்ட தலைவர்கள் விருப்பமனுஅளித்தவர்களிடம் நேர்காணல் செய்தனர். ஒவ்வொரு நாளும் கட்சிநிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்கள் சூழ வந்து நேர்காணலில் பங்கேற்றனர். எந்த திசையில் பார்த்தாலும் திமுக கரை வேட்டிகளாகவும், கட்சி கொடிகளாகவும் காட்சியளித்தன. இதனால் கடந்த 5 நாட்களாக அண்ணா அறிவாலயம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இறுதி நாளான நேற்று சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி,மா.சுப்பிரமணியன் போட்டியிடும் சைதாப்பேட்டை தொகுதி ஆகியவற்றில் வேறு யாரும் போட்டியிட விருப்ப மனு அளிக்காததால், அத்தொகுதிகளுக்காக நேர்காணலில் வேறு யாரும் பங்கேற்கவில்லை. அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் போட்டியிட 26 பேர் நேர்காணலில் பங்கேற்றனர்.
வேட்பாளர் நேர்காணல் முடிவடைந்த நிலையில், வரும் 10-ம் தேதி வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து 11-ம் தேதி திமுக தேர்தல் அறிக்கையுலும் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago