9 மாவட்டங்களில் தொகுதி கேட்கும் பாஜக

By கி.மகாராஜன்

பாரதிய ஜனதா கட்சியின் முதல் நிலை தலைவர்கள் போட்டியிடுவதற்காக சென்னை, மதுரை உட்பட 9 மாவட்டங்களில் அதிக தொகுதியைப் பெற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு அதிக செல்வாக்குள்ள 35 தொகுதிகளைக் கேட்டு அதிமுகவிடம் பாஜக பட்டியல் வழங்கியுள்ளது. பாஜக சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களை `ஏ' பட்டியலிலும், திருச்சி, தஞ்சை, வேலூர், ராமநாதபுரம் மாவட்டங்களை `பி' பட்டியலிலும் வைத்துள்ளது.

இந்த தேர்தலில் `ஏ' மற்றும் `பி' பட்டியலில் உள்ள 9 மாவட்டங்களில் கட்சியின் முதல் நிலை தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களை நிறுத்தி வெற்றிபெற வைத்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.

இப்பட்டியலில் இல்லாத மாவட்டங்களில் தொகுதிகள் ஒதுக்கினால் அந்தத் தொகுதிகளை திரும்ப வழங்கி, 9 மாவட்டங்களில் உள்ள தொகுதியைப் பெறவும் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்