கோவையில் 3 தொகுதிகளுக்கு பாஜக குறி

By க.சக்திவேல்

பாஜகவை பொறுத்தவரையில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு உள்ள வலிமையான வாக்கு வங்கியுடன், கோவையில் தங்களுக்கு சொந்த செல்வாக்கும் இருப்பதை கூடுதல் பலமாக கருதுகின்றனர்.

2014 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாகராஜன் 4,31,717 வாக்குகளைப் பெற்று வென்றார். அடுத்த இடத்தில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகளை பெற்று 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார். திமுக 2,17,083 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 5,71,150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளரான பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஆர்.மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார்.

2016 சட்டப்பேரவை தேர்தலில் கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள பத்து தொகுதிகளில் 8-ல் பாஜக மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மேட்டுப்பாளையம், வால்பாறை தவிர மற்ற தொகுதிகளில் மக்கள் நல கூட்டணி வேட்பாளர்கள் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை தக்கவைத்தார். இதுதவிர, கவுண்டம்பாளையத்தில் 22,444 வாக்குகள், தொண்டாமுத்தூரில் 19,043 வாக்குகள், சிங்காநல்லூரில் 16,605 வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. எனவே, நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் செல்வாக்குள்ள 3 தொகுதிகளை கேட்டுப்பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்