தொகுதிக்கு ரூ.20 லட்சம் கூட செலவு செய்ய முடியாது: மதிமுக நிர்வாகிகளிடம் வைகோ விரக்தி

By செய்திப்பிரிவு

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தான் கேட்ட தொகுதிகளைத் தர அதிமுக மறுத்ததால் விரக்தி அடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்கூட்டணியை விட்டு கடைசி நேரத்தில் வெளியேறினார். அதோடு, அந்தத் தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும் தடாலடியாக அறிவித்தார்.

இப்படி முன்பு திமுக, அதிமுக கூட்டணிகளில் இருந்தபோது போதிய இடங்கள் மதிமுகவுக்கு ஒதுக்காததால் கூட்டணிகளில் இருந்து வெளியேறியவர் வைகோ. அதற்காக மதிமுகவினர் இழந்தவை ஏராளம். ஆனால், இந்த தேர்தலில் நிதியளிப்புக் கூட்டங்களுக்காக தமிழகத்தில் செல்லும் இடமெல்லாம், ‘‘திமுக கூட்டணியில் நமக்கு குறைவான இடங்களே கிடைக்கும், அதற்காக வருத்தப்படக் கூடாது’’ என்று மதிமுக நிர்வாகிகளை சமாதானம் செய்து வருகிறார் வைகோ.

மதுரையில் சமீபத்தில் நடந்த தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் பேசிய வைகோ, ‘‘சில கட்சிகள், ஒரு தொகுதிக்கு ரூ. 20 கோடி வரை செலவழிக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால், நாம் ரூ. 20 லட்சம் செலவு செய்வதற்கே யோசிக்கும் நிலையில் உள்ளோம். இதை தமிழகம் முழுவதும் நிர்வாகிகள், தொண்டர்கள் யோசித்து பார்க்க வேண்டும் ’’ என்று உருக்கமாக கட்சியின் பொருளாதார நிலைமையை விளக்கி நிர்வாகிகளை சமாதானம் செய்து வருகிறார். அவரது பேச்சால் மதிமுக நிர்வாகிகள் சோர்வடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்