தேர்தல் தேதியை இறுதி செய்வது தொடர்பாக தமிழகத்தின் சத்யபிரத சாஹூ உள்ளிட்ட 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் முன்னேற்பாடுகளை குறித்து ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில், கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டறிந்த குழுவினர், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர். இதனிடையே, தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக தமிழகத்துக்கு 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுடன் நடத்திய ஆலோசனையில், தேர்தல் முன்னேற்பாடுகள், பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago