கோவையில் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்தக் கூட்டம் தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று பாஜக வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் நேற்று தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக தேசியத் தலைவர்கள் தமிழ்நாடடுக்கு வருகை தருகின்றனர். கோவையில் வரும் 25-ம் தேதி நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் தமிழகத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தும் கூட்டமாக இருக்கும்.
இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு ஒரே காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் மிகச்சிறந்த வல்லமை மிக்க ஆட்சிதான். ஊழலற்ற அரசாக மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
திமுக கட்சி நடத்தும் கூட்டங்கள் மற்றும் மற்ற கட்சிகளின் கூட்டங்களில் இளைஞர்களைப் பார்ப்பது மிக அரிதாக உள்ளது. பாஜகவில் புதிதாக சேரக் கூடியவர்களே இளைஞர்கள் தான். முதல் தடவை வாக்களிப்பவர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள் வந்து தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். பிரதமரின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று அடைந்துள்ளது.
இவ்வாறு எல்.முருகன் பேசினார்.
தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து வந்திருந்த 50-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கோவையில் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து, இந்த கூட்டம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பாஜக ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago