தருமபுரியில் நடனம் ஆடிய திமுக எம்.பி., எம்எல்ஏ

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரியில் திமுக சார்பில் நேற்று நடந்த பிரச்சார சைக்கிள் பேரணி தொடக்க நிகழ்ச்சியின் போது எம்எல்ஏ-வும், எம்.பி-யும் கட்சியினருடன் இணைந்து நடனம் ஆடிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

தருமபுரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கான மைதானத்தில் தொடங்கி ஒட்டப்பட்டி, அதியமான்கோட்டை வழியாக நல்லம்பள்ளி வரை செல்லும் வகையில் பிரச்சார சைக்கிள் பேரணிக்கு நேற்று திமுக ஏற்பாடு செய்திருந்தது. இந்த பேரணியில் பங்கேற்க திமுக நிர்வாகிகளும், கட்சி உறுப்பினர்களும் சைக்கிள்களுடன் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நேற்று காலை திரண்டனர்.

இந்த பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏ-வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பேரணியை தொடங்கி வைக்கும் முன்பாக இருவரும் கட்சியினருடன் இணைந்து சில நிமிடங்கள் நடனம் ஆடி பேரணியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தினர். இந்தக் காட்சிகள் கட்சியினரால் உடனடியாக சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாக பகிரப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்