தென்மாவட்டங்களில் முக்கிய தொகுதிகளை குறிவைக்கும் பாஜக

By ரெ.ஜாய்சன்

தென்மாவட்டங்களில் உள்ள முக்கிய தொகுதிகளை பாஜக குறி வைக்கிறது. அதிமுகவில் எம்.பி.யாக இருந்து பாஜகவில் ஐக்கியமான சசிகலா புஷ்பா, தூத்துக்குடி தொகுதியைக் குறிவைத்து பணிகளை தொடங்கியுள்ளார். இவர், ஏற்கெனவே தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்தவர். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். எனவே, இத்தொகுதியை பாஜக கேட்டுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதிமுகவில் நிலவும் கோஷ்டி அரசியல் காரணமாக இத்தொகுதி தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாஜகவினர் காத்திருக்கின்றனர்.

இதேபோல், திருநெல்வேலி தொகுதிக்கும் பாஜக குறி வைக்கிறது. அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவிய, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் இத்தொகுதியில் களம் காண தயாராகிறார். இவர், நெல்லை தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்று, அமைச்சராகவும் இருந்தவர். திருநெல்வேலி தொகுதியில் இப்போதே தேர்தல் பணிகளை அவர் தொடங்கிவிட்டார்.

தமிழகத்தில் பாஜகவுக்கு அதிக செல்வாக்குள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. இந்த மாவட்டத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட பாஜக விரும்புகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்