புதுவையில் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னணி தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.
“பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி புதுச்சேரி வருகிறார். பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளார். அதையடுத்து மார்ச் 1-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகிறார். மேலும் பல மத்திய அமைச்சர்களும் தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரி வரவுள்ளனர்” என்று புதுச்சேரி பாஜகவினர் நேற்று தெரிவித்தனர். முக்கியத் தலைவர்கள் வருகையால் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
பிப்.27, 28-ல் அமித்ஷா தமிழகம் வருகை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27, 28 தேதிகளில் தமிழகம் வருகிறார்.
கடந்த 14-ம் தேதி அரசு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடி, வரும் 25-ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். வரும் 21-ம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலத்தில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 19-ம் தேதி தமிழகம் வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக வரும் 27, 28 தேதிகளில் தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 28-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களை பங்கேற்கச் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். மார்ச் 1-ம் தேதி அமித் ஷா புதுச்சேரி செல்கிறார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago
தேர்தல் 2021
3 years ago