அரசியல் ரீதியாக வேலூர் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸுக்கு எதிராக திராவிட இயக்கம் வலிமையடைந்தபோது அதில் வேலூர் மிக முக்கிய பகுதியாக விளங்கியது. திராவிட இயக்கத் தலைவர்கள் பலரைத் தந்த பகுதி வேலூர்.
சமூக ரீதியாக குறிப்பிட்ட சமூகக் கட்டமைப்பைக் கொண்டிராமல், பல சமூகங்களும் வாழும் பகுதி இது. இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் முஸ்லிம் லீக் கூட்டணி பலத்துடன் பலமுறை களம் கண்ட தொகுதி இது.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி),டி.எம் கதிர் ஆனந்த் (திமுக), பாண்டுரங்கன் (அமமுக), சுரேஷ் (மநீம) தீபாலட்சுமி (நாம் தமிழர்) உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் தொடக்கத்திலேயே பரபரப்பான தொகுதி வேலூர். இங்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரது தந்தை துரைமுருகன் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து பணத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் என இருவருமே வலிமையான வேட்பாளர்கள் என்பதால் களத்தில் போட்டி மிக கடுமையாக உள்ளது. சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி இங்கு குறிப்பிட்ட அளவில் இருப்பது திமுகவுக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஏ.சி.சண்முகத்துக்கு தனிப்பட்ட முறையில் சமூக வாக்குகள் இருப்பது அவருக்கு வலிமையைத் தருகிறது. இருவரும் சமபலத்துடன் மோதும் சூழல் உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளால் கோடை வெப்பத்தைக் காட்டிலும் அதிகம் கொதிப்பில் இருக்கிறது வேலூர் தொகுதி. வருமான வரித்துறையின் சோதனைகளால் பிரச்சாரத்துக்குக் கூட செல்ல முடியவில்லை என்று நீதிமன்றத்தை நாடினார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.
முன்னாள் அமைச்சர், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் என்ற முகவரியும் முகமும் அவருக்கான அடையாளம் என்பதால் கருத்துக் கணிப்பில் மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார்.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபா லட்சுமி 3-ம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் பாண்டுரங்கன் 4-ம் இடத்தில் உள்ளார்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago