கள நிலவரம்: திருச்சி தொகுதி யாருக்கு?

By செய்திப்பிரிவு

தமிழகத்தின் பொருளாதார வளமிக்க மாவட்டங்களில் திருச்சியும் ஒன்று. கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்வெட்டு, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றின் காரணமாக முடங்கிய ஏராளமான சுயதொழில் நிறுவனங்கள், அதிலிருந்து மீள முடியாமல்  திருச்சி மக்கள் தவித்து வருகின்றனர்.

அதேபோல கஜா புயலால் தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே புரட்டிப் போட்டிருக்கின்றன. வானம் பார்த்த பூமி என்பதால், போதிய மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மையும் இந்தத் தொகுதியின் முக்கியப் பிரச்சினை இருக்கிறது.

இந்நிலையில் திருச்சி தொகுதிக்கு   நாடாளுமன்ற வேட்பாளர்களாக வி.இளங்கோவன் (தேமுதிக), சு. திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), சாருபாலா தொண்டைமான் (அமமுக), ஆனந்தராஜா (மநீம), வினோத் (நாம் தமிழர்) ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.

திருச்சி தொகுதியில் காங்கிரஸ், அமமுக, தேமுதிக என 3 கட்சிகளுக்கும் கணிசமான அளவு ஆதரவு இருப்பதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த 3 வேட்பாளர்களுக்குமே செல்லுமிடங்களில் மக்களிடத்தில் வரவேற்பு கிடைக்கிறது. ஆனால் வாக்குகளாக மாறுமா என உறுதியாக கூறமுடியவில்லை.  எனவே வாக்காளர்களின் மனநிலையை கணிக்க முடியாமல் வேட்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

 

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

தற்போதைய கள நிலவரப்படி காங்கிரஸின் திருநாவுக்கரசர், அமமுகவின் சாருபாலா ஆகியோர் முன்னிலை வகிப்பதாக தெரிகிறது. எனினும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் 3 பேரில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

https://www.kamaden

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்