தாமிரபரணி ஆறு பிறப்பெடுத்து பாய்ந்தோடும் பகுதி இது. ஒரே தொகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையும், கடலும் சங்கமிக்கும் சிறப்பு பெற்றது. பாபநாசம் மலையில் தொடங்கி கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள கடல் பகுதி வரை பரந்து விரிந்த தொகுதி இது. நெல்லை மாநகராட்சி அமைந்துள்ள நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகள் இந்த தொகுதியின் பிரதான பகுதிகள். இவற்றை தவிர பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளே.
நீ்ணடகாலமாகவே அதிமுகவும், திமுகவும் வலிமையாக மோதிக் கொண்ட தொகுதி இது. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பு வரை இந்த தொகுதியில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் குறைவே. தொகுதி மறு சீரமைப்பின்போது திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்த நாங்குநேரி, ராதாபரம் தொகுதிகள் நெல்லையில் இணைக்கப்பட்டன. அதுபோலவே தென்காசி தொகுதியில் இருந்த அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் தொகுதியும் புதிய நெல்லை தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
திருநெல்வேலி
பாளையங்கோட்டை
அம்பாசமுத்திரம்
ஆலங்குளம்
நாங்குநேரி
ராதாபுரம்
தற்போதைய எம்.பி
பிரபாகரன் அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
முந்தைய தேர்தல்கள்
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
திருநெல்வேலி : ஏ.எல்.எஸ். லட்சுமணன், திமுக
பாளையங்கோட்டை : முகைதீன் கான், திமுக
அம்பாசமுத்திரம் : முருகையா பாண்டியன், அதிமுக
ஆலங்குளம் : பூங்கோதை ஆலடி அருணா, திமுக
நாங்குநேரி : வசந்தகுமார், காங்கிரஸ்
ராதாபுரம் : இன்பதுரை, அதிமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் (அதிமுக)
சா. ஞானதிரவியம் (திமுக)
மைக்கல் ராயப்பன் (அமமுக)
வெண்ணிமலை (மநீம)
சத்யா (நாம் தமிழர்)
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago