கள நிலவரம்: திருநெல்வேலி தொகுதி யாருக்கு?

By செய்திப்பிரிவு

நெல்லை மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளனர். தவிர இருவருமே நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் இப்போதைய நிலவரப்படி மக்கள் யார் பக்கம் என்ற குழப்பம் நிலவுகிறது.

கடந்த முறை அதிமுக வேட்பாளரே வெற்றி பெற்றார் என்ற அளவில் மனோஜ் பாண்டியனுக்கு சற்றே கூடுதல் வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தாலும் கூட்டணியில் பாஜக இருப்பது இவருக்கு பின்னடைவாக இருக்கிறது. இது திமுகவுக்கு சாதகமாக அமையலாம். அமமுக சார்பில் நிற்கும் மைக்கேல் ராயப்பனும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ நாடார் என்ற முறையில் கனிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கிறார்.

2011-ல் தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டபோது இவர் அமோக வெற்றி பெற்றவர். அதனால் இம்முறை அதிமுக வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாக இவர் பார்க்கப்படுகிறார்.

தொகுதியில் ஆளுங்கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.300 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் (அதிமுக)

சா. ஞானதிரவியம் (திமுக)

மைக்கல் ராயப்பன் (அமமுக)

வெண்ணிமலை (மநீம)

சத்யா (நாம் தமிழர்)

 

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஹெச்.மனோஜ் பாண்டியனை திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம் முந்துகிறார். இதன்மூலம் நெல்லையில் திமுகவின் கொடி உயரப் பறக்கிறது. அதிமுகவின் மனோஜ் பாண்டியன் 2-ம் இடத்திலும், அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

https://www.kamadenu.in/opinion-poll-result?utm_source=site&utm_medium=TTH_election2019_banner&utm_campaign=TTH_election2019_banner

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்