தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி

By நெல்லை ஜெனா

தமிழகத்தின் பண்பாட்டு பதிவுகளை தாங்கி நிற்கும் அடையாளங்களில் ஒன்று தஞ்சாவூர். சமையல் தொடங்கி, இயல், இசை, நாடகம் என முத்திரைப்பதித்த மண் இது. கலைகள் செழித்தோங்கி வளர்ந்த தஞ்சை தமிழகத்தின் செழுமையான கலாச்சாரத்தை தாங்கி நிற்கிறது.

பிற்கால சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சை ராஜாராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் தந்த பூமி.

இங்கு நிரம்பி இருக்கும் கோயில்கள் தமிழர்களின் கட்டடக்கலைக்கு சான்றாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

தஞ்சை பெரிய கோயிலும், திருவையாறு ஆராதனை விழாவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியுமே தனித்தனி அடையாளத்தை கொண்டதாக விளங்குகிறது.

விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட இந்த தொகுதி, காவிரி டெல்டா பகுதி. காவிரி தண்ணீர்க்காக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அதிகமாக கொண்ட பகுதி. உலகுக்கு சோறு வழங்கி சோழ வளநாடு தற்போது விவசாயம் செய்ய காவிரி தண்ணீருக்காக போராடி வருகிறது.

அரசியல் ரீதியாகவும் தஞ்சை தனி அடையாளத்தை கொண்டது. தமிழகத்தில் திமுக வலிமையடைந்த பிறகு அதற்கு வலிமை சேர்க்கும் முக்கிய பகுதியாக தஞ்சை விளங்கி வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சிங்கார வடிவேல், துளசி அய்யா வாண்டையார் போன்றவர்கள் எம்.பியாக இருந்த தொகுதி.

திமுகவின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் 5 முறை தொடர்ச்சியாக வென்ற தொகுதி இது. திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சியே நேரடியாக களம் கண்டுள்ளது. அதேசமயம் அதிமுக கூட்டணியை பொறுத்தவரையில் பலமுறை இந்த தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

1977-ம் ஆண்டு இந்த தொகுதியில் வென்ற அதிமுக பல ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2014-ம் ஆண்டு வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது 

 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

 

தஞ்சாவூர்

திருவையாறு

ஒரத்தநாடு

பட்டுக்கோட்டை

பேராவூரணி

மன்னார்குடி

 

தற்போதைய எம்.பி

பரசுராமன், அதிமுக

 

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரம்

 

கட்சி   வேட்பாளர்வாக்குகள்அதிமுகபரசுராமன்5,10,307திமுகடி.ஆர்.பாலு3,66,188பாஜகமுருகானந்தம்58,521காங்கிரஸ்கிருஷ்ணசாமி வாண்டையார்30,232சிபிஎம்தமிழ்செல்வி23,215

 

                                         

முந்தைய தேர்தல்கள்

 

ஆண்டுவென்றவர்2ம் இடம்1971சோமசுந்தரம், திமுககிருஷ்ணசாமி, ஸ்தாபன காங்1977சோமசுந்தரம், அதிமுக  எல்.கணேசன், திமுக1980சிங்காரவடிவேல், காங்  தங்கமுத்து, அதிமுக1980இடைத்தேர்தலசிங்காரவடிவேல், காங்தர்மலிங்கம், திமுக1984  சிங்காரவடிவேல், காங்பழனிமாணிக்கம், திமுக1989சிங்காரவடிவேல், காங்பழனிமாணிக்கம், திமுக1991துளசி அய்யா வாண்டையார், காங்பழனிமாணிக்கம், திமுக1996பழனிமாணிக்கம், திமுகதுளசி அய்யா வாண்டையார், காங்1998பழனிமாணிக்கம், திமுகஎல்.கணேசன், மதிமுக1999பழனிமாணிக்கம், திமுகதங்கமுத்து, அதிமுக2004பழனிமாணிக்கம், திமுகதங்கமுத்து, அதிமுக2009பழனிமாணிக்கம், திமுகதுரை பாலகிருஷ்ணன், மதிமுக

 

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

 

தஞ்சாவூர்      : ரெங்கசாமி, அதிமுக

திருவையாறு   : துரை.சந்திரசேகரன், திமுக

ஒரத்தநாடு      : ராமசந்திரன், திமுக

பட்டுக்கோட்டை : சேகர், அதிமுக

பேராவூரணி    : கோவிந்தராசு, அதிமுக

மன்னார்குடி    : டி.ஆர்.பி. ராஜா, திமுக

 

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 

என்.ஆர்.நடராஜன் (தமிழ் மாநில காங்கிரஸ்)

எஸ். எஸ். பழநிமாணிக்கம் (திமுக)

முருகேசன்  (அமமுக)

சம்பத் ராமதாஸ் (மநீம)

கிருட்டிணகுமார் (நாம் தமிழர்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்