சிவகங்கை தொகுதியின் பெயரை கூறியவுடனேயே நினைவுக்கு வருபவர் ப.சிதம்பரம். முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் 7 முறை வென்ற தொகுதி. தமிழகத்தின் பாரம்பரியத்துக்கு சான்றாக விளங்கும் செட்டி நாடு வீடுகளும், சமையலும் இந்த பகுதி மக்களின் பண்பாட்டை எடுத்துக்கூறுகிறது.
சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளுடன், புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம், ஆலங்குடி தொகுதிகளை கொண்டது சிவகங்கை. இந்த தொகுதியில் நீண்டகாலம் வென்ற கட்சி காங்கிரஸ். நீண்டகாலம் எம்.பி.யாக இருந்தவர் ப.சிதம்பரம். அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணியில் இந்த தொகுதியை காங்கிரஸ் தொடர்ந்து தக்க வைத்து வந்துள்ளது.
1980களுக்கு முன்பாக திமுக, அதிமுக இங்கு முத்திரை பதித்துள்ள போதிலும், சிதம்பரம் தனது செல்வாக்குடன் சொந்த தொகுதியாக வைத்திருந்தார்.
எனினும் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 2வது இடத்தில் திமுகவும், மூன்றாவது அணி அமைத்து போட்யிட்ட பாஜக மூன்றாவது இடத்தையும் பிடித்தது. சொந்த செல்வாக்கு இருந்தபோதிலும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு 4வது இடமே கிடைத்தது.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
திருமயம்
ஆலங்குடி
காரைக்குடி
திருப்பத்தூர்
சிவகங்கை
மானாமதுரை (எஸ்சி)
தற்போதைய எம்.பி
செந்தில்நாதன், அதிமுக
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரம்
முந்தைய தேர்தல்கள்
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
திருமயம் : ரகுபதி, திமுக
ஆலங்குடி : சிவ. மெய்யநாதன், திமுக
காரைக்குடி : ராமசாமி, காங்கிரஸ்
திருப்பத்தூர் : பெரிய கருப்பன், திமுக
சிவகங்கை : பாஸ்கரன், அதிமுக
மானாமதுரை (எஸ்சி) : மாரியப்பன் கென்னடி, அதிமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
எச்.ராஜா (பாஜக)
கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)
தேர்போகி வி பாண்டி (அமமுக)
சினேகன் (மநீம)
சக்திப்பிரியா (நாம் தமிழர்)
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago