ராமநாதபுரம் தொகுதி கடலோரப்பகுதியை கொண்டது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக மீன்பிடித் தொழில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மண்டபம் மீன்பிடித் துறைமுகம் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கிறது. இவற்றை தவிர பரமக்குடியில் நெசவுத்தொழிலும் ஒரளவு பிரபலம்.
இந்த தொகுதியைச் சேர்ந்த பலர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்வது வாடிக்கை. விவசாய பெருங்குடி மக்களுடன், மீனவ மக்களையும் அதிகமாக கொண்ட தொகுதி இது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழியும், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கியும் இணைந்துள்ளது ராமநாதபுரம் மக்களவை தொகுதி.
80களுக்கு முன்பாக காங்கிரஸ் பாரம்பரியமாக போட்டியிட்டு வென்ற இந்த தொகுதியில் அதன் பிறகு அதிமுக, திமுக இடையே தான் நேரடி போட்டி நிலவியுள்ளது. ஓரிரு முறை கூட்டணி பலத்துடன் காங்கிரஸும், தமாகாவும் வென்றுள்ளன.
எனினும் பாரம்பரியமாக திராவிட கட்சிகளின் செல்வாக்கு கொண்ட தொகுதி இது. தொடக்க காலத்தில் பார்வர்டு பிளாக் கட்சிக்கும் வாக்கு வங்கி இருந்த தொகுதி இது.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்
பரமக்குடி (எஸ்சி)
திருவாடனை
அறந்தாங்கி
திருச்சுழி
தற்போதைய எம்.பி
அன்வர் ராஜா, அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
முந்தைய தேர்தல்கள்
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
ராமநாதபுரம் : மணிகண்டன், அதிமுக
முதுகுளத்தூர் : பாண்டி, காங்கிரஸ்
பரமக்குடி (எஸ்சி) : முத்தையா, அதிமுக
திருவாடனை : கருணாஸ், அதிமுக
அறந்தாங்கி : ரத்தினசபாபதி, அதிமுக
திருச்சுழி : தங்கம் தென்னரசு, திமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
நயினார் நாகேந்திரன் (பாஜக)
நவாஸ் கனி (இ.யூ.மு.லீக்)
வது.ந ஆனந்த் (அமமுக)
விஜயபாஸ்கர் (மநீம)
புவனேஸ்வரி (நாம் தமிழர்)
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago