திண்டுக்கல்லில் ‘வலுவான’ வேட்பாளரை தேடும் அமமுக: அதிமுக போட்டியில்லாததால் உற்சாகம்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் தொகுதியில் அதி முக போட்டியிடாததால் உற் சாகமடைந்துள்ள அமமுகவினர், வேட்பாளர் அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர். கட்சித் தலைமை வலுவான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட் டுள்ளது.

அமமுக சார்பில் 24 மக்க ளவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தொகுதிகளுக்கு இதுவரை வேட்பாளர்கள் அறி விக்கப்படவில்லை. திண்டுக்கல் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பா.ம.க. போட்டியிடுவதால் அதிமுக, அமமுக இடையே நேரடிப் போட்டி இல்லாத நிலையில் அமமுக கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

எப்படியும் தொகுதியை கூட்டணிக்கு விட்டுக்கொடுத்த அதிருப்தியில் உள்ள உள்ளூர் அதிமுக வினர், தங்களுக்குத் தான் வாக்களிப்பர் என மாவட்ட அமமுக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதற்காக வேட்பாளர் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். திமுக வேட் பாளருக்கு ஈடாக செலவழிக்கக் கூடிய, வசதி படைத்த வலுவான வேட்பாளரை களம் இறக்க அமமுக கட்சி தலைமை முடிவு செய்து வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் தொழிலதிபர் ஒருவரை களம் இறக்க வாய்ப் புள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

பா.ம.க., வேட்பாளர் ஜோதிமுத்து மற்றும் திமுக வேட்பாளர் வேலுச்சாமி ஆகி யோர் தேர்தல் பணிகளை தொடங் கிவிட்ட நிலையில், அமமுக வேட்பாளர் அறிவிப்பு க்காக அக்கட்சியினர் காத்திருக் கின்றனர். திண்டுக்கல்லில் திமுக, பாமக, அமமுக இடையே வலு வான போட்டி உறுதி ஆகி உள்ளது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்