கடைசி நேரத்தில் திருப்பம்: ஜோதிமுத்து திண்டுக்கல் பாமக வேட்பாளரானது எப்படி?

By பி.டி.ரவிச்சந்திரன்

அதிமுக கூட்டணியில் திண்டுக் கல் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் தேர்வில் அக்கட்சித் தலைமை மும்முரம் காட்டியது. பாமக வெளியிட்ட முதல் 5 தொகுதிகள் பட்டியலில், திண்டுக்கல் வேட்பாளர் அறிவிக் கப்படவில்லை.

திண்டுக் கல்லில் போட்டியிட கட்சி நிர்வாகிகளுக்கு கடும் போட்டி நிலவியதே இதற்கு காரணம். கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா அல்லது மாநில துணை பொதுச் செயலாளர் சீனிவாசன் ஆகியோரில் ஒருவருக்குத்தான் திண்டுக்கல் ஒதுக்கப்படும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவித் தனர். பாமக வெளியிட்ட முதல் பட்டியலில் சென்னை மத்திய தொகுதி வேட்பாளர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அதே சமூகத்தைச் சேர்ந்த திலகபாமாவுக்கு திண்டுக்கல்லை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்தது.

இதனால் அவருக்கு சீட் இல்லை என முடிவானது. அடுத்ததாக பாமக மாநில துணைத்தலைவராக உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சீட் உறுதி என உள்ளூர் கட்சி நிர்வாகிகளே அவரது சுய விவரத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில், திமுக வேட்பாளராக அறிவிக்கப் பட்ட வேலுச்சாமிக்கு சீனிவாசன் தூரத்து சொந்தம் என்றும், தொழில் ரீதியாக இருவருக்கும் தொடர் புள்ளதாக கட்சித் தலைமையிடம் சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட அரசப்பபிள்ளைபட்டியைச் சேர்ந்த பாமக மாநில துணை பொதுச் செயலாளர் ஜோதிமுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தபோதும் கட்சித் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரது வெற்றிக்கு பாடுபடுவோம் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்