பாமக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு: திண்டுக்கல்லில் திமுக வேட்பாளரை எதிர்த்து ஜோதி முத்து போட்டி

By செய்திப்பிரிவு

பாமக தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5 தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனர். முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலின்படி, தருமபுரி தொகுதியில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் தொகுதியில் வடிவேல் ராவணன், கடலூர் தொகுதியில் கோவிந்தசாமி, அரக்கோணம் தொகுதியில் ஏ.கே.மூர்த்தி, மத்திய சென்னை தொகுதியில் சாம் பால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மீதமுள்ள இரு தொகுதிகளில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை இன்று (திங்கள்கிழமை)  பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார். அதன்படி, ஸ்ரீபெரும்புதூரில் பாமக துணைத் தலைவர் அ.வைத்திலிங்கமும், திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஜோதி முத்துவும் போட்டியிட உள்ளனர்.

திண்டுக்கல்லில் திமுக சார்பில் ப. வேலுச்சாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாமக துணை பொதுச் செயலாளர் ஜோதி முத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்