கிறிஸ்தவ அமைப்புகளை வளைக்கும் தினகரன்: அதிமுக, திமுக கட்சியினர் அதிர்ச்சி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

அம்mமா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழகம் முழு வதும் உள்ள தென்னிந்திய திருச்சபை, கத்தோலிக்க திருச் சபை உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப் புகளின் பேராயர்களையும், நிர் வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதை அறிந்த திமுக, அதிமுக கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுக, திமுக கட்சிகள் கூட் டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கூட்டணியை முடிவு செய்துவிட்டன. ஆனால், இன்னும் அவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது முடிவாகவில்லை. அதுவரை காத்திருக்காமல் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சியினர், அவர்கள் போட்டியிடும் தொகு திகள் ஓரளவு அடையாளம் காணப் பட்டுள்ளதால், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் இந்த முறை அக் கட்சிக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வாக் குகள் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சில முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், கிறிஸ்தவ அமைப்புகள் தங்கள் ஆதரவு எந்த கட்சிக்கு என்று இன்னும் அறிவிக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினோ, அக்கட்சித் தலைவர்களோ இதுவரை கிறிஸ்தவ அமைப்பு தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரவில்லை. இந்நிலையில், கிறிஸ்தவ, முஸ்லிம் வாக்கு வங்கியை குறிவைத்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துப்பேசி ஆதரவு திரட்டி வருகிறார். குறிப்பாக சிஎஸ்ஐ, ஆர்.சி. திருச்சபை பேராயர்களை சந்தித்து, அவர்களிடம் ஆசி பெற்று அமமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அதுபோல், முஸ்லிம் மதத் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் உள்ள மதுரை - ராமநாதபுரம் திருமண்டல தென்னிந்திய திருச்சபை பேராயர் எம்.ஜோசப்பை தின கரன் சந்தித்துள்ளார். அதன் பின்னர், ஆர்.சி. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமியையும் டி.டி.வி.தினகரன் சந்தித்துள்ளார். அப்போது, இரு கிறிஸ்தவ பேராயர்களிடமும் வரும் தேர்தலில் அமமுகவுக்கு கிறிஸ்தவ மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதற்கு, அவர்களும் பரிசீலனை செய் வதாக கூறியுள்ளனர்.

இதில், ஜோசப், மதுரை - ராமநாதபுரம் மண்டல திருச்சபை பேராயராக உள்ளதால் அவர் ஆதரவு தெரிவித்தால் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த சிஎஸ்ஐ கிறிஸ்தவர்கள் ஆதரவைப் பெறலாம் என்றும், அந்தோணி பாப்புசாமி, மதுரை பேராயராக மட்டுமின்றி தமிழக, புதுவை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைத் தலைவராக இருப்பதால் இவர் உத்தரவிட்டால் இரு மாநில கிறிஸ்தவ அமைப்புகள், கிறிஸ்தவ மக்கள் ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் டி.டி.வி.தினகரன் இருப்பதாக அமமுகவினர் தெரிவித்தனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்