அதிமுக வேட்பாளராக மனோஜ் பாண்டியன் போட்டி: நெல்லை தொகுதியில் பிரபாகரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.எச்.பாண்டியனுக்கும், திமுக வேட்பாளர் கீதாஜீவனுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. அந்த தேர்தலில் பி.எச்.பாண்டியன் வெற்றி பெற்றார்.

2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தனும், 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் களம் இறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ்.ராமசுப்புவும் வெற்றி பெற்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக கே.ஆர்.பி.பிரபாகரன் போட்டியிட்டார்.

கட்சியில் அதிகம் அறிமுகம் இல்லாதவர் என்பதால் அவர் வெற்றி பெறுவாரா என்ற சந்தேகம் அதிமுகவினருக்கு ஏற்பட்டது. ஆனால், சுமார் ஒன்றேகால் லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குறைந்த வயதிலேயே மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இவருக்கு மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் ஜெயலலிதா வழங்கினார்.

ஆனால், இந்த தேர்தலில் கே.ஆர்.பி.பிர பாகரனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று அதிமுகவினரே வெளிப்படை யாகக் கூறினர். அதன்படியே, அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக மனோஜ் பாண்டிய னுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. 20 ஆண்டு களுக்கு பிறகு, திருநெல்வேலி தொகுதியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநெல்வேலி தொகுதியில் மனோஜ் பாண்டியன் மீண்டும் களம் இறங்குகிறார். திமுக வேட்பாளராக ஞான திரவியம், அமமுக வேட்பாளராக ஞான அருள்மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

காரணம் என்ன?

கே.ஆர்.பி.பிரபாகரன் தனது பதவிக் காலத் தில், அவரது சொந்த ஊரைத் தவிர மற்ற பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், தொகுதியில் பல இடங்களுக்கு

அவர் செல்லவே இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. எம்பி, மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகள் கைவசம் இருந் தும் வெற்றி பெற்ற பின்னர் தொகுதி மக்களிடம் அறிமுகம் இல்லாதவராகவே இருந்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. மீண்டும் அவர் போட்டி யிட்டால் வெற்றி பெற முடியாது என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் கூறு கின்றனர்.

அதிமுக ஒருங் கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சேரன்மகாதேவி அருகிலுள்ள கோவிந்தபேரியைச் சேர்ந்தவர் எம்எல் படித் துள்ள இவர்,அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் ஏற்கெனவே பதவி வகித்துள்ளார். இவரது தந்தை பி.எச்.பாண்டியன் தமிழக சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகித்தவர். தாயார் சிந்தியா பாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆவார். நீண்ட அரசியல் பாரம்பரியம் மனோஜ் பாண்டியன் வெற்றிக்கு உதவுமா? அல்லது தற்போதைய எம்பி கே.ஆர்.பி.பிரபாகரன் மீதான அதிருப்தி மனோஜ் பாண்டியனுக்கு பாதகத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக வேட்பாளருக்கு வலுவான கூட்டணி பலம் உள்ளது.. அமமுகவுக் கும் திருநெல்வேலி மாவட்டத்தில் செல் வாக்கு உள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் களில் பல இடங்களில் அதிமுக வேட்பாளர்களை அமமுக வேட்பாளர் கள் தோற்கடித்துள்ளனர். எஸ்டிபிஐ கட்சி இக்கூட்டணியில் இருப்பது அமமுகவுக்கு பலம் சேர்க்கிறது. பலத்த போட்டி இருப்பதால், வேட்பாளர் களின் பிரச்சார உத்தி, வாக்குறுதி கள் உள்ளிட்டவையே தேர் தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்