புதுச்சேரி மக்களவையில் காங்கிரஸ் வேட்பாளரான 69 வயது வைத்திலிங்கத்துக்கு எதிராக என்.ஆர்.காங்கிரஸில் 29 வயது நாராயணசாமி களம் இறக்கப்பட்டுள்ளார். இருவரும் ஒரே நாளில் இன்று மனுத்தாக்கல் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், புதுச்சேரியில் பிரதான கட்சிகளாக உள்ள காங்கிரஸும், என்.ஆர்.காங்கிரஸும் யார் வேட்பாளர் என்பதைக் கூட அறிவிக்காமல் இருந்தன. இதனால் தேர்தல் தேதி அறிவித்த பின்னரும் புதுச்சேரி அரசியல் களம் மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒரேநாளில் இன்று (வெள்ளிக்கிழமை) மனுத்தாக்கல் செய்தனர்.
காங்கிரஸைப் பொறுத்தவரை நேற்று இரவு சபாநாயகர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் காங்கிரஸ் தலைமை வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வைத்திலிங்கம் தான் வேட்பாளர் என அறிவிக்கவில்லை. ஆனால் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் அவர் தான் வேட்பாளர் என்பது உறுதியானது. காலையில் அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டவுடன் வேட்பு மனுவை வைத்திலிங்கம் தாக்கல் செய்தார்.
69 வயதான வைத்திலிங்கம் இரு முறை முதல்வராக இருந்துள்ளார். அத்துடன் 8 முறை எம்எல்ஏவாக தொடர் வெற்றி பெற்றுள்ளார். மனுத்தாக்கலுக்குப் பிறகு இயல்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் தந்து விட்டு புறப்பட்டார்.
வைத்திலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் இன்று காலை 8 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக 29 வயது டாக்டர் நாராயணசாமியை அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி அறிவித்தார். அதையடுத்து மதியமே வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். முன்னாள் எம்எல்ஏ கேசவனின் மகனான நாராயணசாமி அரசியலில் அனுபவமில்லாதவர். அதேநேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி கல்விக் குழுமத்தின் செயலராக உள்ளார். மூன்று ஆண்டுகாலம் என்.ஆர்.காங்கிரஸில் இளைஞர் அணியில் இருப்பதாக கட்சித் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ஆனால், 8 ஆண்டுகளாக என்.ஆர்.காங்கிரஸில் இதுவரை விவசாய அணி, இளைஞர் அணி, மகளிர் அணி எந்த அணியும் தனியாக இல்லை. பொறுப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.இதைத் தொடர்ந்து புதுச்சேரி மக்களவையில் 69-க்கு எதிராக 29 மோதுவதாக அரசியல் வட்டாரங்களில் கலகலப்பாக பேசத் தொடங்கியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago